Thursday, May 23, 2013

சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமல்ல !




அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர். 19 வயது இளம்பெண்ணை காதலித்தார். அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் உறவு கொண் டார்.

பின்னர் அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றினார். இது தொ டர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கிஷோரை பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக கூறி, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பஞ்சாப் , அரியானா உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிஷோர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு: பாலியல் பலாத்காரத்துக்கும், பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. பாலியல் பலாத்காரம் என்பது பெண்ணின் மீது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நடத்தப்படும் கொடூர தாக்குதலாகும். இது பெண்ணை விலங்குக்கு சமமாக்கி விடுகிறது.

பாலியல் பலாத்காரம் என்பது ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிரான குற்றமாகும். அதே நேரம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணின் சம்மதத்து டன் பாலியல் உறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது. இது, வாக்குறுதியை மீறிய செயலாக மட்டுமே கருதப்படும். இது போன்ற வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் உண்மையிலேயே அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினாரா அல்லது ஏமாற்றம் நோக்கத்துடன் செயல்பட்டாரா என்பதை பார்க்க வேண்டும்.

19 வயது நிரம்பிய பெண்ணுக்கு போதிய முதிர்ச்சியும், தார்மீக ஒழுக்க வாழ்க்கையின் முக்கியத்துவமும் நன்றாக தெரிந்திருக் கும். அப்படி இருக்கையில், குற்றம் சாட்டப்பட்டவருடன் சம்மதம் இல்லாமல் அந்த பெண் உறவு கொண்டார் என்று கூற முடியாது. எனவே, கிஷோரை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

No comments:

Post a Comment