Wednesday, May 29, 2013

காமா கதிர்களால் பூமிக்கு ஆபத்து: அமெரிக்க விஞ்ஞானி தகவல் !

அண்டத்தில் பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள நிலையில் அவற்றில் ஒன்றான உல்ப் ரயேட் 104 என்று பெயரிடப்பட்ட நட்சத்திரம் பூமியிலிருந்து 8 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இது 5 லட்சம் ஆண்டுகளில் எந்த நேரத்திலும் தீப்பிளம்பாக வெடித்துச் சிதறலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி கிரான்ட் ஹில் தெரிவித்துள்ளார்.
அப்படி வெடிக்கும் போது, அதிலிருந்து தீங்கு விளைவிக்கக் கூடிய காமா கதிர்கள் வெளியேறும். அதன் கதிரியக்க வேகத்தைப் பொருத்து, பூமியின் மீதான தாக்கமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலத்தில் நான்கில் ஒரு பகுதி அழிந்து விடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக பூமியை அடையும் புற ஊதாக் கதிர்களின் அளவில் 50 சதவீதம் அதிகரிக்கும். பூமியின் வெப்ப நிலையும் உயரும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment