Sunday, February 3, 2013

இலங்கையில் பெய்த சிவப்பு மழை, வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதற்கான ஆதாரம்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


பொலன்னறுவை - அரலகங்கவில பிரதேசத்தில் அண்மையில் கிடைக்கப்பெற்ற விண்கல்லின் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்த சிவப்பு மழையிலும் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான உறுதிப்பாடுகள் தென்படுவதாக நாசா நிபுணர் தெரிவித்துள்ளார்.
சிவப்பு மழை மற்றும் விண்கல் பகுதிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நாசா நிறுவனத்தின் நிபுணர் பேராசிரியர் சந்ரா விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவருடன் பேராசிரியர் ரிச்சட் பீ ஹுவர் ஆகியோர் நேற்று மாலை சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்கவை சந்தித்துள்ளனர்.
அதன்போது, இதுவரை இடம்பெற்ற பரிசோதனைகள் தொடர்பான முன்னெற்றம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிவப்பு மழை உட்பட ஏனைய பகுதிகளில் பல வர்ணங்களில் பெய்த மழை தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சினால் ஏற்கனவே
அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான இயற்கைக்கு மாறான மழை வீழ்ச்சி காரணமாக பொது சுகாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதே இந்த ஆய்வின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மழையின் நீர் மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவற்றில் நுண்ணுயிர்கள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரலகங்வில பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட விண்கல் பகுதிகளிலும், சிவப்பு மழையிலும் உள்ள ஒற்றுமை குறித்து நாசா நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
நவீன தொழினுட்ப உபகரணங்களை பயன்படுத்தி சோபோன் மற்றும் காடிஸ் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய குறித்த விண்கள் மாதிரிகளில் உள்ள நுண்ணுயிர்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அழிந்து போன உயிரினங்கள் என தெரியவந்துள்ளது.
இது பூமிக்கு வெளியில் அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று புகழ்பெற்ற நட்சத்திர ஆய்வாளரான ஸ்ரீமத் பெஃட் ஹொயில் முன்வைத்துள்ள பென்ஸ்பர்மியா அடிப்படை கொள்கை இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள நாசா நிபுணர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் கடந்த 500 வருடங்களுக்குள் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரகங்கவிலயில் விண்கல் பகுதிகள் வீழ்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருந்தபோதும், பொலன்னறுவை - அரலகங்வில பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற விண்கல் பாசானத்தில் வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதை கண்டறிய முடியவில்லை என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அத்துல சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment