Sunday, February 17, 2013

நடுக்கடலில் இருந்து காப்பாற்றப்பட்ட மியன்மார் பிரஜைகள் காலித் துறைமுகத்தில்! ( செய்தித் துளிகள்) !



மட்டக்களப்பு கடற்பரப்பிலிருந்து 225 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவில்  மீட்கப்பட்ட 38 வெளிநாட்டவர்களும் காலி துறைமுகத்திற்கு அழைத்து
 செல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கடற்பரப்பில் வழிதவறி தத்தளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று மாலை மீட்கப்பட்டனர்.
இவர்கள் சில நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் கடலில் தத்தளித்ததால் நோய் தன்மைகளை எதிர்நோக்கிய நிலையில் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்திருந்தார்.
களியாட்ட விடுதியில் தமிழ் இளைஞன் கொலை!- 5 பேர் விளக்கமறியலில்
கொள்ளுபிட்டி, முச்சந்தி பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டி முனிதாச குமாரசிங்க மாவத்தையில் முச்சந்தி பகுதியில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதிக்குள் நேற்று முன்தினம்  அதிகாலை இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
இவரது கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவர்கள் ஐவர் நேற்று கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஐந்து பேரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment