Monday, January 7, 2013

கைவிடப்பட்ட இரட்டைக் குடியுரிமைச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வருகிறது!


இலங்கையில் கடந்த காலங்களில் தற்காலிகமாக கைவிடப்பட்ட இரட்டை குடியுரிமை சட்டங்களை மீண்டும் அமுல்படுத்த குடிவரவு கட்டுப்பாட்டுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
குறித்த முறைமைகளை நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அமுலாக்கும் பொருட்டு, தற்காலிகமாக இது கைவிடப்பட்டிருந்ததாக வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரிக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இரட்டை குடியுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக வெளியுறவுகள் துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றினால் உறுதி செய்யப்படுகின்றவர்களுக்கு விரைவாக இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment