Saturday, January 19, 2013

சிறிலங்காவில் வேற்றுக்கிரவாசிகள் – ஆதாரங்கள் சிக்கின!


பொலன்னறுவை அரலகன்வில பிரதேசத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட வேற்றுக்கிரக விண்கல் துகல்களிலிருந்து ஒருகல உயிரிகளான அல்காக்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பரிசோதனை நடத்திய நாஸா நிறுவனத்தின் விஞ்ஞானி ரிச்சட் பி ஹூவர் இதனை உறுதிப்படுத்தியதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் அணில் சமரநாயக்க குறிப்பிட்டார்.
இங்கிலாந்தின் கார்டிப் பல்கலைக்கழகத்தின் வானியல் தொடர்பான பேராசிரியர் சந்ரா விக்ரமசிங்க கடந்த மாதம் இலங்கை வந்தபோது அல்கா வகையில் இருந்த நீர் மாதிரியை எடுத்துச் சென்றார். மாதிரியை விரிவான முறையில் ஆராய்ச்சி செய்த அவர் அதில் ஒருகல உயிரினகள் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார் என டொக்டர் அணில் சமரநாயக கூறினார்.
இது தொடர்பான மேலதிக பரிசோதனைகளை நடத்த நாஸா நிறுவனத்தின் விஞ்ஞானி ரிச்சட் பி ஹூவர் இங்கிலாந்து செல்லவிருக்கிறார்.
சிறிலங்காவுக்கு, வேற்றுக்கிரக உயிரினங்கள் தொடர்பாக கிடைத்த முதலாவது தகவலும் இதுவாகும்.
இது வேற்றுக்கிர உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வோருக்கு விஞ்ஞான ரீதியில் விரிவான பெறுமதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒருகல உயிரினங்களின் மூலம் இலங்கைக்கோ பூமிக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது என டொக்டர் அணில் சமரநாயக்க வலியுறுத்தினார்.
http://www.jvpnews.com/srilanka/10905.html

No comments:

Post a Comment