Friday, November 16, 2012

கனடாவிற்கு குடிவருவது எப்படி? நீங்களே உங்கள் தகுதியைத் தீர்மானிக்கலாம். விபரங்கள் இதோ!


கனடாவிற்கு குடிவருவது எப்படி என்ற கேள்வி பலரிடமும் இப்போது தக்கி நிற்கிறது. இந்த ஆண்டு முதல் கனடாவிற்குள் அனுமதிக்குப்படும் புதியவர்களின் விவகாரத்தில் பல மாற்றங்களை கனடா ஏற்படுத்தியுள்ளது.
2013ம் ஆண்டு கனடாவிற்குள் 260,000 பேரை கனடாவிற்குள் அனுமதிக்க கனடிய குரவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் என்ற வகையாறவிற்குள் அடங்கங்கூடிய 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 வீதமாகும்.
இவ்வாறு வருகை தருபவர்கள் ஐந்து வகையாறாவுக்குள் அடங்குவர். இந்த ஐந்து வகையாறாக்களும், இதற்கான படிமுறைகளும் கனடிய குடிவரவுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது [http://www.cic.gc.ca/english/immigrate/index.asp ].
இவர்களிற்காக முக்கியமான தகுதியாக கனடாவின் தேசிய மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி இரண்டில் ஒன்றைக் கையாளும் திறமை ஓரளவு உள்ளவர்களாகவும் இருப்பது அவசியம். இவர்கள் உத்தியோகபூர்வ விண்ணப்பங்களை நேரடியாக கனடாவின் தூதரகங்களிற்குச் சமர்ப்பித்து முயற்சிக்க வேண்டும்.
கனடிய அரசின் இந்த இணையத்தளம் தங்களது சேவைகள், நிரப்பப்பட வேண்டிய விண்ணங்கள் உள்ளிட்ட சகல விபரங்களையும் தனது இணையத்தளத்தில் மிகவும் தெளிவாக வைத்திருக்கிறது. இதனை நீங்கள் நேரடியாகவே சென்று பார்வையிடலாம்.
2012ல் கனடாவிற்குள் அனுமதிக்கப்படுவோரில் இரண்டாவது கட்டமாக கனடாவில் தற்போது வதிபவர்களின் குடும்ப வகுப்பில் தெரிவு செய்யப்படும் வாழ்க்கைத் துணைகள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை அனுமதிக்கும் வகையாறா இடம்பெறுகிறது. இந்த வகையாறாவில் 73,000 அடுத்த ஆண்டில் அனுமதிக்கப்படுவர். இது மொத்தத் தொகையில் 27 வீதமாக இருக்கிறது.
மீதமுள்ள 2013ம் ஆண்டில் அனுமதிக்கப்படவுள்ள 28 ஆயிரம் புதிய வரவாளர்களில் அகதிகளாக சுமார் 8,500 பேரையே கனடா ஏற்றுக் கொள்ளும். இது மொத்த புதிய வரவாளர்கள் தொகையில் 3 வீதமாகும். அதுகூட முன்னயைப் போலல்லாது தற்போது அகதிக் கோரிக்கையாளர்களின் விவகாரத்தில் கடுமையான மாற்றங்களைக் கனடா செய்துள்ளது.
அத்தோடு ஒரு அகதிக் கோரிக்கையாளரின் வழக்கை சில மாதங்களிலேயே முடித்து அவர் அனுமதிக்கப்பட முடியாதவர் என்றால் உடனேயே திருப்பியணுப்பும் நடவடிக்கைக்கும் அது முஸ்தீபு கொண்டுள்ளது.
வியாபார, தொழில்ரீதியான முதலீடு செய்யுமளவிற்கு காசிருந்தால் அல்லது தொழில்சார்புலமை, கற்றறிவு போன்ற தகுதிகளே இனிக் கனடாவிற்குள் புதிய குடிவரவாளர்களை அனுமதிக்கும் அளவுகோல்களாகும். இந்த இணையத்தளம் நீங்கள் கனடாவிற்கு வருவதற்கு தகுதியுள்ளவரா இல்லையா என்பதை உங்களிற்கு விளக்கமளிக்குமளவிற்கு தகவல்களைக் கொண்டது.
அத்தோடு கனடிய அரசு இடையிடையே வேறு நாடுகளில் தனது தூதரங்களினூடாக கனடாவிற்கு வருகை தரக்கூடிய வகுப்பினர் பற்றிய விளக்கவுரைகளையும் மேற்கொள்கிறது [ http://www.cic.gc.ca/english/work/jobfair.asp ].


http://www.canadamirror.com/canada/1314.html

No comments:

Post a Comment