Friday, November 30, 2012

96 வயதில் தந்தையான தாத்தாவுக்கு கிடைத்த அதிஷ்டம் !


ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கர்கோடா கிராமத்தை சேர்ந்த ராம்ஜித் ராகவ் தனது 96வது வயதில் ஆண் குழந்தைக்கு தந்தையானார்.

தொடர்ந்து பாதாம், வெண்ணை, பால் மற்றும் சைவ உணவுகளை சாப்பிட்டு வருவதே தனது ஆற்றலுக்கும் ஆண்மைக்கும் காரணமென்று இந்த வயதான தந்தை பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் மாமிசம் உண்பதையும் விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட காலணிகள், பெல்ட், தோல்பை போன்றவற்றை பயன்படுத்துவதையும் எதிர்த்து பிரசாரம் செய்து வரும் மிருக உரிமைகளுக்கான 'பீட்டா' அமைப்பு தங்கள் அமைப்பின் விளம்பர சுவரொட்டிகளில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு 96 வயது வரை ஆண்மையுள்ளது என்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதைப் போன்ற சுவரொட்டி பிரசாரங்களில் ஹாலிவுட் கவர்ச்சி கன்னி பமீலா ஆண்டர்சன், ஆங்கில கவிஞரும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளருமான சர்.பால் மெக்கார்ட்னி போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள் தான் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹரியானா மாநில வயதான தந்தை ராம்ஜித் ராகவுக்கு இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே எதிர்வரும் 2013ம் ஆண்டிற்கான பீடடாவின் பிரசார சுவரொட்டியில் முதன்முதலாக இந்தியாவை சேர்ந்த ஒரு சராசரி முதியவரின் புகைப்படம் வெளியாகின்றது.

No comments:

Post a Comment