Sunday, October 21, 2012

கடந்த நாட்களில் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கள்ளக் காதல் ஜோடி குறித்த செய்து இது.


கடந்த நாட்களில் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கள்ளக் காதல் ஜோடி குறித்த செய்து இது.
விபரமாகத்தருகிறேன்

17ஆம் திகதி ரம்புக்கனையில் இருந்து பாணந்துறை துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது அதிவேக ரயில்.

இது வெயங்கொடவில் ஹீந்தெனிய என்கிற இடத்தை அதிகாலை அடைந்தபோது யுவதி ஒருவரும், இளைஞன் ஒருவரும் இதன் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்கள்.

கம்பஹாவில் இகலகமவைச் சேர்ந்த 25 வயது இளம் தாய் நயனா லியனகே, 22 வயது உடைய பிரதீப் குமார ஆகியோரே தற்கொலை செய்து கொண்டார்கள்.

நயனா லியனகேயின் கணவனுடைய சகோதரனின் மகன்தான் பிரதீப் குமார. அதாவது உறவு முறையில் இருவரும் பெரியம்மாவும், பெறா மகனும் ஆவர். பெரியப்பாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற பெறா மகனுக்கு பெரியம்மாவுடன் கள்ளக் காதல் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

இருவரதும் கள்ளத் தொடர்பு இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இருவருக்கும் இடையிலான இத்தொடர்பு குறித்து வீட்டுக்காரர்கள் பல கேள்விகளை கேட்டு இருக்கின்றார்கள்.

இதை அடுத்து இருவரும் ஒன்றாக கடந்த 16 ஆம் திகதி வீட்டை விட்டு கிளம்பி இருக்கின்றனர்.

நயனா லியனகேயின் வங்கிப் புத்தகத்தில் இருந்த முகவரியை வைத்தே இவர்கள் குறித்த தகவல்களை பொலிஸார் அறிந்து கொண்டனர்.

நயனா லியனகேயின் கணவன் வழங்கி உள்ள வாக்குமூலம் வருமாறு:-

“ நாம் ஆறு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டோம். பெறாமகனுடன் எனது மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருக்கின்றார் என்று எனக்கு பலராலும் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த மாதம் 28 ஆம் திகதி இக்கதைகளை நான் நம்பவில்லை. அன்று நான் வீட்டுக்கு திடீரென வந்திருந்தேன். இருவரும் என்னிடம் கையும் மெய்யுமாக மாட்டுப்பட்டுக் கொண்டனர். இவர்கள் கட்டிலில் நிர்வாணமாக கிடந்தனர். எனக்கு என்ன செயவது என தெரியவில்லை. இருவரையும் நன்றாக நையப் புடைத்தேன்.

என் மனைவியின் தாய் வீடு காலியில் உள்ளது. தாய் வீட்டுக்கு செல்லச் சொல்லி மனைவிக்கு உத்தரவிட்டேன். வெட்கத்தில் என் மனைவி அழுதார். பின் தாய் வீட்டுக்கு சென்றார்.

எமது பிள்ளை முன்பள்ளி செல்கின்றார். எல்லா வேலைகளையும் நான்தான் தனியே செய்ய வேண்டி இருந்தது. எனவே திரும்பி வரச் சொல்லி மனைவியை கேட்டு இருந்தேன். நான் ஒரு வாரத்துக்கு லீவு எடுத்தேன். பிள்ளையை முன்பள்ளியில் கொண்டு போய் விட்டேன். நான் திரும்பி வந்தபோது மனைவியை வீட்டில் காணவில்லை.

மனைவி எனக்கு தொலைபேசித் தொடர்பு மேற்கொண்டார். தேட வேண்டாம் என்றும் பெறா மகனுடன் போய்க் கொண்டு இருக்கின்றார் என்றும் சொன்னார்.

நான் பெறா மகனின் வீட்டுக்கு தொலைபேசித் தொடர்பு கொண்டேன். பெறா மகனும் வீட்டை விட்டு போய் உள்ளார் என அறிந்தேன். என்னால் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடிந்தது. இருவரையும் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டேன்.

இருவரும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து விட்டனர் என்கிற தகவல் கிடைத்தது. இருவரதும் சடலங்களை நேரில் சென்று பார்த்து அடையாளம் காட்டினேன். இவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்து இருக்கவில்லை. நானும், என் குழந்தையும் தற்போது தனித்து விட்டோம். ”

No comments:

Post a Comment