Wednesday, April 11, 2012

‘யூரோ’ சப்ப மேட்டர்’ ‘பீட்சா’ உதாரணத்தில் பட்டய கௌப்புறான்!


ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மார்க், பிரான்க், லிரா, பெசட்டா என்று தங்களுக்கு என்று தனித்தனி கரன்சிகள் வைத்திருந்தன. ஒரே கரன்சியாக இருப்பது வசதி, பொருளாதாரமும் மேம்படும் என்பதால் ‘யூரோ’ என்ற பொது கரன்சி 1999-ல் அறிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் மொத்தம் 17 நாடுகளில் யூரோ கரன்சி தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் யூரோ கரன்சியில் இருந்து விலக வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு தெரிந்தால் சொல்லுங்கள் என்று இங்கிலாந்தை சேர்ந்த ‘நெக்ஸ்ட்’ சில்லரை வர்த்தக நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் பிரபல தொழிலதிபருமான சைமன் உல்ப்சன் கடந்த அக்டோபரில் அறிவித்தார். ரூ.20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து பொருளாதார நிபுணர்கள், நிதித்துறை பேராசிரியர்கள், வணிக, வர்த்தக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ஏராளமான ஐடியாக்கள் குவிந்தன. அதில் மிகமிகமிக இளமையான நிபுணர் ஹாலந்தை சேர்ந்த ஜூர் ஹெர்மன்ஸ். வயது 11. ‘யூரோ கரன்சி சிக்கல் சாதாரண விஷயம்’ என்ற பீடிகையுடன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறான்.
கரன்சி மாற்றும் மெஷின் உதவியுடன் கிரீஸ் மக்கள் எல்லாரும் தங்களிடம் இருக்கும் யூரோக்களை டிராச்மாவாக (யூரோவுக்கு முன்பு இருந்த கிரீஸ் கரன்சி) முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு சேரும் மொத்த யூரோவையும் பெரிய பீட்சாவை பீஸ் போடுவது போல அரசு பீஸ் போட்டு, கடனை அடைக்க வேண்டும். யூரோவை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ள ஜூர், பீட்சா படம் வரைந்து விளக்கம் கொடுத்திருக்கிறான்.
அவனது ஐடியா மற்றும் விளக்கிய விதத்தை பார்த்து வியந்துபோன அதிகாரிகள் குழு அவனை பாராட்டி ரூ.6 ஆயிரம் செக் அனுப்பியிருக்கிறது. நல்ல ஐடியா எது என்று ஜூலை 5-ம் தேதி அறிவிக்க உள்ளார்கள். ‘கலந்து கொண்டதே பெருமைக்குரிய விஷயம்’ என்கிறான் ஜூர்.

No comments:

Post a Comment