Saturday, April 7, 2012

தாத்தா வயதில் தந்தையான அதிசயம்!


பிரிட்டனில் 67 வயது நிரம்பிய முதியவர் ஒருவர், பெண் குழந்தைக்கு தந்தையான அதிசயம் நிகழ்ந்துள்ளது.
Malcolm Lawrence என்ற 67 வயது நிரம்ப இவர் 12 முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கும் Ann-Marie, 31 என்ற பெண்ணிற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணமான இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று வருத்தப்பட்ட இவர்களுக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது பற்றி Mrs. Malcolm Lawrence கூறுகையில் சிலர் எங்களது வயது வித்தியாசத்தை பார்த்து கிண்டல் செய்கின்றனர். ஆனால் எங்களது திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக உள்ளது அதன் அடையாளம் தான் இந்தக் குழந்தை என்று தெரிவித்துள்ளார்.
எங்கள் குடும்பத்திற்கு புதிதாக வந்துள்ள இந்த குழந்தையை நினைத்து நாங்கள் மிகவும் சந்தோஷப்படுவதாக Malcolm Lawrence ன் முதல் மனைவி மகன் Gavin – 29 தெரிவித்துள்ளார். Gavin ற்கு Joshua-7, and Holly-May-4 என்ற குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment