Monday, March 12, 2012

உடல் வலிமையை வெளிப்படுத்தும் சாதனை சிறுவர்கள் !


ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் இலுமியன், இவருக்கு 7 வயதுடைய குலியனோ, 5 வயதுடைய கலாடியு என்ற 2 மகன்கள் இருக்கின்றனர்.
இந்த இரு சிறுவர்களும் தங்களது உடல் வலிமையை வித்தியாசமாக வெளிப்படுத்தும் சாதனையாளர்களாக விளங்குகிறார்கள். அதாவது கம்பத்தில் இரு கைகளை பிடித்துக் கொண்டு உடல் முழுவதையும் அந்தரத்தில் தூக்கி நிறுத்தும்(ரிப்டிங் வேயிட்) என்ற கலையை திறமையாக நிகழ்த்துகிறார்கள்.
இந்த 2 சிறுவர்களும் தங்களது 2 வயது முதலே பயிற்சியில் ஈடுபட்டதாக தந்தை கூறுகிறார். ஆனால் குழந்தைகளை இத்தகைய கடுமையாக பயிற்சியில் ஈடுபடுத்துவது சரியல்ல என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
வேறு சிலரோ இவர்களின் சாதனை காணொளிக் காட்சியைப் பார்த்து விட்டு மனதார பாராட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment