Tuesday, January 31, 2012

ரூ.80 லட்சம் செலவில் மர்லின் மன்றோ உருவப்படம் !!


ஆங்கில சினிமாப்பட உலக ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ ஆவார். இவரது உருவப்படத்தை பிரத்தியோகமாக தயாரித்து தனது மாளிகையில் வைக்க பிரபல பாப் இசைப்பாடகி ரிகானா(23) விரும்பியுள்ளார்.
இவரது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக இங்கிலாந்தை சேர்ந்த கலைஞர் கிளேர் மில்னர் சுமார் 4 மாதங்கள் அயராது உழைத்து மர்லின் மன்றோவின் உருவப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த உருவப்படம் 5 அடி அயரம் கொண்டதாகவும், 65 ஆயிரம் பளபளக்கும் கண்ணாடி கற்களால்(கிரிஸ்டல்) உருவானதாகும். இதற்கான செலவு ரூ.80 லட்சம்(இந்திய மதிப்பு). இது அமெரிக்காவுக்கு கப்பலில் பயணமாகிறது.

No comments:

Post a Comment