Saturday, December 10, 2011

மனிதனில் கண்ட கடி!!

ஓவியக் கண்காட்சில நண்பர்: என்னங்க இது, எந்த கோணத்துல பாத்தாலும் ஒண்ணும் புரியல இந்த படத்துல. நண்பர் 2: அது மூஞ்சி பாக்கற கண்ணாடிடா
காபிக்கடையில் நண்பனிடம்: காபி ஆறிப்போறதுக்குள்ள குடிச்சிடு. Hot Coffee அஞ்சு ரூபா, Cold Coffee பத்து ரூபான்னு போட்ருக்கான்.
தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு. வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?

நண்பன் 1: ஏன்டா, இவ்ளோ மெள்ள லெட்டர் எழுதற? நண்பன் 2: எங்கப்பாவால வேகமா படிக்க முடியாது.

நண்பர் 1: ஒரு நாளைக்காவது ஆபீஸ்க்கு சரியான நேரத்துக்குப் போகலாம்னு பாத்தா முடியல. நண்பர் 2: ஏன்டா, கொஞ்சம் சீக்கறம் எழுந்து, சீக்கறமா எல்லா வேலையும் முடிச்சிட்டு, வேகமா ரெடியாக வேண்டியதுதானே. நண்பர் 1: மொதல்ல வேலை கெடைககனுமில்ல

பஸ்ஸுல மந்திரி, கலெக்டர்னு யார் ஏறினாலும் மொதல் சீட்டு ட்ரைவருக்குத் தான்.

மேல் உலகத்துல சாமி மொதல் ஆளுகிட்ட: நீ சின்ன வயசுல பண்ணின தப்புக்கு ஒனக்கு ஒரு எரிஞ்சு போன பொண்ண பரிசா தரேன். ரெண்டாவது ஆளுக்கு ஒரு அழகான பொண்ண பரிசா தரார். மொதல் ஆள்: என்னாங்க இப்டி பண்றீங்க. சாமி: இது அந்த பொண்ணு சின்ன வயசுல பண்ணின தப்புக்கு

நண்பர் 1: எதுக்குடா உன் வீட்டுல மூணு நீச்சல் குளம் கட்டி இருக்க. நண்பர் 2: ஒண்ணு ஜில் தண்ணில குளிக்கறவங்களுக்கு, இன்னொன்னு வெண்ணீர்ல குளிக்கறவங்களுக்கு, மூணாவது காலித்தொட்டி, நீச்சல் தெரியாதவங்களுக்கு.

ஒரு நேர்முகத்தேர்வு கேள்வி கேட்பவர்: எலெக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது. வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... கேள்வி கேட்டவர்: யேய், யேய், யேய் நிறுத்து, நிறுத்து வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....

காதலி: நாளைக்கு எனக்கு பொறந்த நாள், ஒரு ரிங் தரியா ப்ளீஸ் காதலன்: லேண்ட் லைனுக்கா, செல்லுக்கா !!!

குண்டுப் பயணி: கண்டக்டர், எனக்கு ரெண்டு டிக்கெட் குடுங்க. கண்டக்டர்: எதுக்குய்யா ஒருத்தருக்கு ரெண்டு டிக்கெட்டு பயணி: ம்... குண்டா இருகேன்ல, அதான். ஒனக்கேன் டிக்கெட்ட குடு. கண்டக்டர்: இந்தா 2 டிக்கெட்டு, 21ஆவது சீட்டும், 37ஆவது சீட்டும் காலியா இருக்கு, போயி ஒக்காந்துக்க.

போலீஸ் 1: என் பையன் விவரம் தெரியாம திடீர்னு நேத்திக்குத் துப்பாக்கிய எடுத்து என் மனைவி நெத்திப் பொட்டுல சுட்டுப்புட்டான். போலீஸ் 2: அய்யய்யோ, என்னா ஆச்சு. எங்க இருக்காங்க, என்னாப்பா இப்டி சொல்ற. போலீஸ் 1: ஏய் ஏய் ஏன் பயப்பட்ற, கண்ணாடில தானே ஒட்டி வெச்சிருந்தா, அது தூள் தூளா ஒடஞ்சு போச்சு போ.

மருமகள்: என் மாமியார் நேத்திக்கு கிணத்துல விழுந்து செத்துப் போயிட்டாங்க. பக்கத்து வீட்டு மருமகள்: ம்.... எல்லார் வீட்லயும் தான் கிணறும் இருக்கு, மாமியாரும் இருக்காங்க. ம்... அதெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும். மருமகள்: எல்லாம் தன்னால விதிப்படி நடக்கும்னு கையக் கட்டிக்கிட்டு ஒக்காந்திருந்தா இருக்க வேண்டியது தான்.

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற. ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன். நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க. ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.

ரயில்வே தேர்வாளர்: ரெண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க. வந்தவர்: ஒடனே என் தம்பியை வரச் சொல்லிடுவேன். அவன் இதுவரைக்கும் ஒரு ரயில் விபத்த கூட பாத்ததில்ல.

ஜட்ஜ்: ஆர்டர், ஆர்டர், ஆர்டர் கைதி: 2 மசால் தோசை, ஒரு பொங்கல், ஒரு ஆமை வடை, ஒரு உளுந்து வடை, ... ஜட்ஜ்: ஷட் அப், ஷட் அப் கைதி: இல்ல, இல்ல ஒரு செவன் அப்

சர்வர்: டெய்லி பார்சல் வாங்கினு போறீங்களே, இங்கயே சாப்ட வேண்டியது தானே சார். வந்தவர்: டாக்டர் என்ன ஹோட்டல்ல சாப்ட கூடாதுன்னு சொல்லி இருக்காரு.

செக் புக் தொலைஞ்சு போச்சு சார் அட ராமா, எவனாவது கையெழுத்து போட்டு பணத்தையெல்லாம் எடுத்துடப் போறான். அப்டி ஒன்னும் நடந்துடாது, நான் ஏற்கனவே எல்லாத்துலையும் கையெழுத்த போட்டு வெச்சிட்டேன்

செராக்ஸ் கடைக்காரர்: காப்பி அடிக்கக்கூடாதுன்னு ஒண்ணாங்க்ளாஸ்லேந்து சொல்லினு இருந்தாங்க எல்லாரும். எனக்கு என்னமோ அன்னிலேந்து இன்னி வரைக்கும் காப்பிதான் கை கொடுத்து வாழவைக்குது.

அப்பா: அழாதப்பா, அழாதப்பா ப்ளீஸ், அம்மாதானே அடிச்சாங்க. உடு, உடு. மகன்: போப்பா, ஒன்ன மாதிரி என்னால தாங்கிக்க முடியல

டீச்சர்: பாக்டீரியா படம் வரைய சொன்னேனே, ஏன் வரையல நீ பையன்: வரைஞ்சிட்டேன் மிஸ், ஆனா பாக்டீரியாதான் கண்ணுக்குத் தெரியாதே

அப்பா: என்னடா இவ்ளோ கம்மியா மார்க் வாங்கிருக்க மகன்: பயங்கர விலைவாசிப்பா இப்பல்லாம், எதையுமே வாங்க முடியல

அப்பா: எங்கடீ சட்டைல வெச்சிருந்த 100 ரூபாயக் காணம் அம்மா: நீங்க தானே புள்ள பரிச்சைக்குப் போறேன்னதுக்கு 10, 20 ன்னு எடுக்கக் கூடாது, 100 எடுக்கனும்னீங்க, அதான்

டீச்சர்: ஏண்டா லேட்டு, பையன்: ஸ்பீடாதான் டீச்சர் வந்தேன், வாசல்ல "பள்ளிப் பகுதி, மெதுவாகச் செல்லவும்" போட்ருந்துது. அதான் டீச்சர் லேட் ஆய்டுச்சு.

பையன் அப்பா குரலில் ஸ்கூலுக்குப் போன் போட்டு: ராமு இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான் சார். அவனுக்கு ஒடம்பு சரியில்ல ஸ்கூல்: நீங்க யாருங்க பேசறது. பையன்: எங்கப்பாதான் பேசறேன்!!

அப்பா: என்னடா எக்ஸாம்ல கேள்வில்லாம் எப்டி இருந்துது. மகன்: ஈஸியாதாம்ப்பா இருந்துது அப்பா: நல்லா பண்ணியிக்கியா மகன்: அதான் ரொம்ப கஷ்டம்ப்பா

சார்: ஒங்கிட்ட 100 ரூபா குடுக்கறேன். அதுல 25 ரூபாய திருப்பி வாங்க்கிகறேன். இப்ப உங்கிட்ட எவ்ளோ பாக்கி இருக்கும். பையன்: ஒண்ணும் இருக்காது சார். சார்: என்னடா, இந்த கணக்குக்கூடவா தெரியல. பையன்: உங்களுக்குதான் சார் என்னப் பத்தி தெரியல சார்: சரி, இப்ப உன் கிட்ட ஒரு ரூபா இருக்கு, ஒங்கப்பா கிட்ட ஒரு ரூபா கேக்கற. அப்ப ஒங்கிட்ட எவ்ளோ இருக்கும் பையன்: ஒரு ரூபாதான் சார் சார்: எப்டிடா பையன்: ஒங்களுக்கு எங்கப்பா பத்தியும் தெரியல சார்

No comments:

Post a Comment