Sunday, November 6, 2011

லண்டனில் நடத்தப்பட்ட சாராய வேட்டை: சிக்கிய இலங்கையர்கள் !


சாதாரணமாக வொட்க்கா(VODKA) என்று சொல்லப்படும் மதுபானத்தின் விலை சற்றுக் குறைவுதான். 70சி அடங்கிய போத்தல் சுமார் 12 முதல் 19 பவுன்ஸ் வரை விற்க்கப்படுகிறது. ஆனால் 1 லீட்டர் வொட்க்கா போத்தலை சுமார் 6 பவுன்ஸுக்கு விற்று அதனூடாகப் பெரும் லாபத்தை சம்பாதித்து வந்துள்ளனர் சிலர். லாபம் சம்பாதித்தாலும் பரவாயில்லை இந்த மலிவான வொட்க்கா என்னும் மதுபானத்தை வாங்கிக் குடித்துவிட்டு அனைவரும் வெறியில் போடும் லூட்டியை அப் பகுதிமக்களால் தாங்கமுடியவில்லையாம். லண்டன் புறநகர்ப் பகுதியான வரால் என்னும் இடத்தில் பொலிசாருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. அப்பகுதியில் மது பாவனை அதிகரித்ததுடன் குடிகாரர்களின் தொந்தரவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

சில குடிகாரர்கள் நிதமும் போதையில் மிதந்துள்ள நிலையில் வறுமையில் இருக்கும் இவர்களால் மதுபாணங்களை நிதமும் எவ்வாறு வாங்கமுடிகிறது என்ற கோணத்தில் பொலிசார் ஆராய ஆரம்பிக்கும்போது 2 இலங்கையர்கள் மாட்டிகொண்டுள்ளனர். இவர்கள் தமக்குச் சொந்தமான கடையில் வைத்து வேற்று நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மற்றும் சுங்க வரி கட்டாத வொட்க்கா மது பாணங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளதாம். மிக மிக மலிவான விலையில் இவர்கள் மதுபானத்தை விற்பதால் இவர்கள் கடையில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அனைத்தையும் பல காலமாகக் கண்காணித்து வந்த பொலிசார் தருணம் பார்த்து கடையை சுற்றி வளைத்துள்ளனர்.

கடையில் இருந்து பல ஆயிரக்கணக்கான பெறுமதியுடைய மதுபாணங்களும் மற்றும் சுங்க வரி கட்டாத வொட்க்கா மது பாணங்களும் பொலிசாரல் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மொத்தமாக அப்பகுதியில் உள்ள 17 கடைகளை பொலிசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். மதுபான சோதனை நடைபெற்றவேளை, அங்கே சரியான அனுமதிப் பத்திரம் இல்லாமல் வேலைசெய்த இலங்கையர் ஒருவரும் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். இதனை அடுத்து இலங்கையர்கள் நடத்திவந்த குறிப்பிட்ட அக்கடையின் மதுபானம் விற்குக் லைசன்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment