Friday, October 21, 2011

இயற்கையை எதிர்போருக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் உலகம்!!


 மதத்தை,மனதை செப்பனிட்டு சரி,பிழைகளை ஆறாம் அறிவுகொண்டு சீர்தூக்கிப்பார்த்து நீதியின் தர்மத்தின் வழியிலே நடப்பவனே மனிதன் என்கின்றனர்.அனால் இன்றோ காமம் இனப்பெருக்கத்துக்காக படைக்கப்பட்ட உணர்வு என்பது  போய் காம உணர்வை தூண்ட மருந்துகளும் இனப்பெருக்கத்தை தடுத்து காம இன்பத்தை அனுபவிக்க உறைகளும் தடைகளும் வந்தது போக ஒருவரின் மலவாயிலை இன்னொருவர் பயன்படுத்தும் செயலை உலகில் அங்கீகரித்து ஓரினச்சேர்க்கை உன்னதமானது என சட்ட அங்கீகாரமும் கொடுத்து விலங்குகள் கூட வெட்கப்படும் செயலில் மனிதன் இறங்கி விலங்குடனும் புணருகின்றான்.காந்தம் கூட ஒத்தமுனைகள் கவரா!!மனிதனோ அதை இயற்கையான உணர்வு என்ற பொய்யையே உண்மையாக்கி அடக்கியாளக்கூடிய உணர்ச்சிக்கு அடிமையாகி அசிங்கமாகிவிட்டான்.எனினும் செய்யும் தவறுகளை நியாயப்படுத்த விருது வழங்கி தவறுகளை ஊக்கிவித்து மனிதத்தை புதைத்து விட்டு சாதனையாளன் போல சந்தோசிக்கவும் செய்கின்றான்.இவனின் தவறால்தான் சுனாமி வந்தது,யுத்தம் வந்தது,இயற்கை அழிவுகள் பெருகின.இப்படியே போனால் உலகை அழிவிலிருந்து காப்பாற்ற இன்னொரு ஜெசுஸ் கிறிஸ்துதான் பிறக்கவேண்டும்.



 காஷ நபகேசெற என்ற பெண்மணிக்கு மனித உரிமைகளுக்கான விருது வழங்கப்பட்டது
[ ஞாயிற்றுக்கிழமை, 16 ஒக்ரோபர் 2011, 02:44.21 பி.ப GMT ]
உகண்டாவின் காஷ நபகேசெற என்ற பெண்மணிக்கு உகண்டாவில் உள்ள ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்தமைக்காக விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு 2011ம் ஆண்டு ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை அன்று மாட்டின் என்ட்லஸ் ஸ்தாபனத்தினால் ஒழுங்கு செயப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் மனித உரிமைகளுக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.
உகண்டாவின் சட்டதிட்டங்களில் ஓரின சேர்க்கையானது பாரிய குற்ற செயால் ஆகும். அங்கு 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சட்டமூலத்தின் அடிப்படையில் இந்த குற்றத்திற்கு ஆயூள் தண்டனையும் வழங்கப்படுகின்றது.
ஜனவரி 26, 2011 ஆண்டு ஓரின சேர்க்கையாளர்களுக்காக உகண்டாவில் குரல் கொடுத்த டேவிட் கடோ கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடதக்கது 

No comments:

Post a Comment