Thursday, July 7, 2011

மோசடி யுவதியைப் புகழ்ந்து எழுதியிருக்கும் புண்ணாக்கு இணையம்

06 July, 2011 by admin
சொந்தமாகத் தமிழில் எழுதவே தெரியாத, மற்றும் பிறர் போடும் செய்திகளை அப்படியே கொப்பி பண்ணிப் போட்டுவரும் மனிதன் என்னும் இணையம் மோசடிப் பேர்வழியான தமிழ் யுவதியை நல்லவர் என்றும் அவர் குடும்பம் தற்கொலை செய்யவுள்ளது என்றும் எழுதியுள்ளது.
இல்லை இல்லை யாரோ எழுதிக்கொடுக்க அதனைப் பிரசுரித்துள்ளது. சமீபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷனா என்ற பெண் வெளிநாட்டில் உள்ள பல தமிழர்களிடம் ஆசைவார்த்தை பேசி பல லட்சங்களைக் கறந்தார் என்ற செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். இச் செய்தியில் என்ன ஆதாரம் இருக்கிறது என புண்ணாக்கு மனிதன் இணையம் கேள்வி கேட்டுள்ளது. குரங்கு குதிரையை கலியாணம் செய்தது, அனகொண்டா ஆளை முழுங்கியது எனச் செய்தி வெளியிட்டுவரும் இந்த இணையம் தமிழர்களுக்காக என்ன செய்தது ?

அரசியல் கட்டுரைகள் வருவதுண்டா ? இல்லை. ஆனால் செய்திகள் தான் இந்த இணையத்தில் வருவதுண்டா ? பணம் சம்பாதிக்கும் நோக்கில் லங்கா சிறி இணையத்தால் ஆரம்பிக்கப்பட்ட மற்றுமொரு உருப்படாத இணையமே இந்த மனிதன் ஆகும். மற்றைய இணையங்களைப் பார்த்துக் கேள்விகேட்கவே தகுதியில்லாத மனிதன் இணையம் எம்மைப் பார்த்துக் கேட்ட கேள்விகளுக்கு நாம் இங்கே ஆதாரங்களை இணைத்துள்ளோம். இது போதுமா இல்லை இன்னும் வேணுமா ? சம்பந்தப்பட்ட திருட்டுப் பெண்ணிடம் காசை வாங்கிக் கொண்டு, மனிதன் இணையம் தற்போது அவருக்குச் சார்பாக எழுதி உண்மைகளை மூடி மறைக்கப்பார்க்கிறது.

இங்கே நாம் அப் பெண்ணின் ஆசைவார்த்தைகளுக்குப் பலியாகி தமது பணத்தைப் அவர் வங்கிக் கணக்கில் போட்ட ஒருவரின் பற்றுச்சீட்டையும், அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளோம். இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டி இருக்கிறது. பொய்யான தகவல்களை மட்டுமே வெளியிட்டு வரும் புண்ணாக்கு இணையமான மனிதன் இணையம் தம்மைப் போல எம்மையும் நினைத்துவிட்டார்கள் போலும். அவர்கள் தான் ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிடுவார்கள் நாங்கள் அப்படி அல்ல. கைகளில் ஆதரங்கள் இருக்கும் பட்சத்திலேயே செய்தியை வெளியிடுவோம். மேலும் சொல்லப்போனால் அரை நிர்வாணமாக ஸ்கைப்பில் இப் பெண் உரையாடிய வீடியோக் காட்சிகளும் இருக்கிறது. நாகரீகம் கருதி நாம் அதனை வெளியிடவில்லை.

அதிர்வு இணையத்தை தனிப்பட்ட ரீதியில் தாக்கி செய்திகளை எழுதிவரும் புண்ணாக்கு இணையமான மனிதன் போன்ற இணையங்கள் தேசிய செயல்பாடுகளை முடக்கவே இலங்கை அரசோடு கைகோர்த்து நிற்கிறது. எதேட்சையாக எமது சேர்வர் கோளாறு காரணமாக நிற்க அப்போது பார்த்து மகிந்தர் பிரித்தானியா வந்த சமயம், மகிந்தவுக்கு அடங்கிய அதிர்வு என்று ஒரு செய்தியைப் போட்டதும் மனிதன் இணையமே ! பின்னர் நாம் எமது சேர்வர் நிறுவனத்திடம் ஏன் எமது சேர்வர் தடைப்பட்டது என்ற காரணத்தை விளக்கும் கடிதத்தைக்கோரி, அதனை ஆதாரமாகப் பிரசுரித்தோம். மூக்குடைபட்ட புண்ணாக்கு மனிதன் இணையம் திரும்பவும் மோசடி யுவதியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை நல்லவர் என்று எழுதுகிறது !

குறிப்பிட்ட யுவதியைப் பற்றி நாம் எழுதாவிட்டால் பலர் பணத்தைக் கொடுத்து மேலும் ஏமாந்திருப்பார்கள். இச் செய்தியை வெளியிட்ட நாள் முதன் எம்மைப் பலர் தொடர்பு கொண்டு தாம் எவ்வாறு ஏமாந்தோம் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் தம்மைப் பற்றி வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே நாம் அவர்களின் ரகசிங்களைக் காத்துவருகிறோம். மணம் முடித்தவர்கள் மணம் முடிக்காதவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனப் பலர் இச் சிக்கலில் மாட்டியுள்ளனர். இப் பெண்ணை நம்பி பணத்தை அனுப்பியுள்ளனர். தற்போது விடயம் தெரிந்தவுடன் தற்கொலைசெய்வேன் என்று மிரட்டுகிறார். பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான், இதுவே உலக நியதி.

நாம் எல்லாரும் ஒரு தாய் பிள்ளைகள் அதனால் பெண்ணுக்காக் குரல்கொடுப்போம் என்று எழுதி புண்ணாக்கு மனிதன் இணையம் தன் செய்தியை முடித்துள்ளது ! பெண்ணுக்காகக் குரல்கொடுக்க வேண்டியது இல்லை. பெண்களின் உரிமைகளுக்கு அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்குத் தான் குரல் கொடுக்க வேண்டும் ! இதுவே சரியாகத் தெரியாத இந்த இணையம் தமிழ் மக்களுக்கு அறிவூட்டப் போகிறதா ? இல்லை விடுதலைப் பாதைநோக்கி நகரப் போகிறதா ? ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் ஏமாற்றுவது யாராக இருந்தாலும் அவர்கள் இனம்காணப்படவேண்டும். அதற்காக ஏமாற்றுவதை மறைக்க முடியுமா ?

இதைவிட ஒரு வேடிக்கையான விடையம் என்னவென்றால், வாகனத்தில் செல்லும்போது ஆனசனப் பட்டிகளை (சீட் பெல்ட்) போடவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட பின்லேடனின் உடலை ஒரு உலங்குவானூர்தியில் கொண்டுவருவது போலவும், ஆனப்பட்டி போடாததால் அவர் உடல் கடலில் விழுவதுபோலம் ஒரு விளம்பர வீடியோவை அமெரிக்கா வெளியிட்டது. அந்த வீடியோவை உண்மையான வீடியோ என நம்பி மனிதன் இணையம் அதனை வெளியிட்டது யாவரும் அறிந்தவிடையமே. பெண்களுக்கு குரல்கொடுக்கவேண்டும் என எழுதியுள்ள மனிதன் இணையம் பெண்களின் மரண அறிவித்தலை இலவசமாகப் போடத் தயாரா ? இல்லை அதன் உரிமையாளரான லங்காசிறி இணையம் பெண்களின் மரண அறிவித்தலை இலவசமாகப் போடத் தயாரா ?



No comments:

Post a Comment