Monday, June 6, 2011

பெண்களால் அதிகளவில் தாக்கப்படும் ஆண்கள்

[ திங்கட்கிழமை, 06 யூன் 2011, 02:37.40 பி.ப GMT ]
பொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவதுண்டு.

ஆனால் பிரிட்டனில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்களால் தாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்முறைகளால் பெண்களால் தாக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக வழக்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2005ல் இந்த எண்ணிக்கை அதாவது ஆண்களைத் தாக்கிய பெண்களின் எண்ணிக்கை 1500ஆகத் தான் இருந்தது. ஆண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் சம்பந்தமாகக் குரல் கொடுக்கும் charity man kind என்ற அமைப்பு இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது.

பெண்கள் மிகவும் வன்முறை மிக்கவர்களாக மாறி வருகின்றனர். வீட்டு வன்முறை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்தில் இருந்து ஏழு சத வீதமாக அதிகரித்துள்ளது.

ஒருவர் மீது மற்றவர் அதிகாரம் செலுத்துவது அல்லது கட்டுப்பாடு செலுத்துவது சம்பந்தமாக ஏற்படுகின்றப் பிரச்சினைகளே இந்த வீட்டு சன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிடுகின்றன.
இதுவே பெண்கள் தமது ஆண் துணைகளைத் தாக்கவும் பிரதான காரணமாகின்றது. இந்த விடயத்தை முழுமையாக மூடி மறைக்க முயலாமல் அரசாங்கம் ஆண்களை இலக்குவைத்து இது சம்பந்தமான சில வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று charity man kind அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டப் பெண்களின் எண்ணிக்கை 2004 மற்றும் 2005 காலப்பகுதியில் 806 ஆக இருந்தது.

இது 2009-10 காலப் பகுதியில் 3494 ஆக அதிகரித்துள்ளது. இதே காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது.
இதில் இன்னொரு முக்கிய விடயம் பெரும்பாலான பாதிக்கப்பட்ட ஆண்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.

No comments:

Post a Comment