Thursday, April 28, 2011

வன்தட்டுகளை சுத்தம் செய்வதற்கு

தரவிறக்க சுட்டி
விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், கோப்புகளை நிர்வகிப்பதில் உலகளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர்(CCleaner) ஆகும்.
அவ்வப்போது ஏற்படும் தற்காலிக கோப்புகள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி வன்தட்டுகளை சுத்தப்படுத்துவதில் சிறப்பாக இது இயங்குகிறது.
இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட்(Pirisoft) நிறுவனம் அண்மையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை(பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பில் மேலும் 20 வெவ்வேறு வகையான புரோகிராம்களுக்கு சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இவை கேம்ஸ் புரோகிராம் முதல் வாய்ஸ் கம்யூனிகேஷன் புரோகிராம் வரை அடங்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்கள் தங்கள் பயன்பாடு குறித்து இந்த பிரவுசர் தயாரித்து வைக்கும் தகவல்களை நீக்கலாம்.
ஐ-ட்யூன்ஸ் குக்கிகள், பழைய விண்டோஸ் பயர்வால் விதிமுறைகள் ஆகியவற்றை புதிய பதிப்பு கவனித்துக் கொள்கிறது. ரெஜிஸ்ட்ரி கிளீனர் பகுதியில் பழைய பயன்படுத்தாத விண்டோஸ் புரோகிராம்களுக்கான குறியீட்டு வரிகளை நீக்க வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, பயர்பொக்ஸ் 4, ஐ ட்யூன்ஸ், ஆப்பரா பிரவுசர், பயர்பொக்ஸ்/மொஸில்லா பாஸ்வேர்ட் பதிவுகள் ஆகியவை தற்போதைய பதிப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. கணணி சப்போர்ட் செய்திடும் அனைத்து புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படுகிறது.
இந்த புதிய சிகிளீனர் விண்டோஸ் எக்ஸ்பி(32 மற்றும் 64 பிட் புரோகிராம்) விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இயங்குகிறது. இவற்றின் சர்வர் ஓபரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகிறது.

No comments:

Post a Comment