Saturday, April 16, 2011

அமெரிக்கா சார்பு தமிழ் உளறல்கள்!!

3 comments:

  1. பொதுமக்கள் மீது லிபியா தொகுப்பு குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது
    [ சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011, 05:59.58 மு.ப GMT ]
    ஒரே நேரத்தில் பல குண்டுகளை உதிர்த்து பயங்கர சேத்த்தை ஏற்படுத்தும் தொகுப்பு குண்டுகளை லிபிய ராணுவம் போராட்டக்காரர்கள் வசம் உள்ள நகரில் வீசியது.
    இந்த தொகுப்பு வெடிகுண்டு தாக்குதல் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வீசப்பட்டு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. லிபியாவில் சர்வாதிகார கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தும் புரட்சியாளர்கள் வசம் உள்ள மிஸ்ட்டாரா நகரம் உள்ளது. இந்த நகரை உருக்குலைத்து போராட்டத்தை ஒடுக்க திட்டமிட்டுள்ள லிபிய ராணுவம் தொகுப்பு குண்டுகளை வீசியது.

    இந்த தாக்குதல் குறித்து எச்.ஆர்.டபிள்யூ என்கிற மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு கூறியதாவது: சர்ச்சைக்குரிய 3 கருவிகளை லிபிய ராணுவம் மிஸ்ட்டாரா வான் பகுதியில் வீசியது. இந்தக் கருவிகளில் இருந்து பல சிறிய குண்டுகள் வீசப்பட்டன. ஏப்ரல் 14ம் திகதி இந்த தொகுப்பு குண்டுகள் விழுந்தன என தெரிவித்தது.

    கடந்த 6 வாரமாக லிபிய ராணுவத்தினருக்கும், புரட்சிப் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்து வரும் முக்கியப் பகுதிக்கு அருகே இந்த தொகுப்பு குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

    இந்தக் குற்றச்சாற்றுகளை லிபியா அரசு செய்தித் தொடர்பாளர் முசா இப்ராகிம் திட்டவட்டமாக மறுத்தார். தொகுப்புக் குண்டுகளை நாங்கள் வீசவில்லை என்றும் கூறினார்.

    ReplyDelete
  2. லிபியா மீதான கூட்டுப்படைத் தாக்குதலில் குழப்பம்
    [ சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011, 08:01.40 மு.ப GMT ]
    லிபியாவில் கடாபி ஆட்சியை வீழ்த்துவதற்கு நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக லிபியாவில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா படைகள் தாக்குதல் நடத்துகின்றன.
    இந்தக் கூட்டுப்படை தாக்குதலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. லிபியாவில் தாக்குதலை தீவிரப்படுத்த பயங்கர ஆயுதங்கள் உள்ளடக்கிய ஏசி 130 ஹெலிகாப்டர்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

    இந்த வேண்டுகோளை நிராகரித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஏ10 வார்தாக் என்ற நீண்ட முகம் கொண்ட போர்க்கருவிகளையே பயன்படுத்துகிறார். இந்த நிலையில் பிரான்ஸ் தலைமையிலான தாக்குதலில் ஒரு கூடுதல் விமானம் கூட சேர்ப்பதற்கு நேட்டோ நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.

    கடாபியை ஆட்சியை விட்டு வெளியேற்றும் வரை தாக்குதலை தொடர வேண்டும் என பிரிட்டனும், பிரான்சும் உறுதியாக உள்ளன. ஆனால் ஸ்பெயினை தொடர்ந்து இத்தாலி தாக்குதல் நடவடிக்கையில் பின்வாங்கி உள்ளது.

    லிபியாவில் கூட்டுப்படைத் தாக்குதல் ஸ்தம்பித்து உள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில்,"லிபியா மீதான பிடி இறுகிக் கொண்டிருக்கிறது" என்றார். நேட்டோ படை தாக்குதலில் மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை கொன்று குவிக்கும் தொகுப்புக் குண்டுகளை கடாபி வீசி வருகிறார்.

    ReplyDelete
  3. நேட்டோ படைகளின் குண்டு மழைக்கு மத்தியில் கடாபி திரிப்போலியில் பொதுமக்கள் மத்தியில் நடமாட்டம்
    [ சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011, 10:04.22 மு.ப GMT ]
    நேட்டோ குண்டு மழைக்கு மத்தியில் கடந்த 14ம் திகதி லிபியத் தலைவர் கடாபி திறந்த ஜீப் ஒன்றில் ஏறி எந்த வித அச்சமுமின்றி பகிரங்கமாக திரிப்போலியை வலம் வந்துள்ளார்.
    அதன் போது அவரது ஆதரவாளர்கள் அவரை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர். மேற்கூரையற்ற ஜீப்பில் ஏறி நின்று கொண்டு அவர் பொதுமக்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டு வீதிவலம் வந்த போது அவரது பாதுகாவலர்களில் இரண்டொருவரே அவருடன் கூட வந்திருந்தனர்.

    ஆயினும் அவருக்கு ஆதரவான பொதுமக்களால் அவர் பயணித்த ஜீப் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. "எனது மக்களின் மத்தியில் நிற்பதற்கு நான் ஒருபோதும் அச்சப்பட மாட்டேன். அதே போன்று நான் ஒரு போதும் மேற்கத்தேய எதிரிகளுக்கு அச்சப்படப் போவதுமில்லை. எனது மக்கள் என்றைக்கும் என் மீது அன்பு கொண்டவர்கள். நானும் எனது மக்கள் மீது அன்பு கொண்டவன்" என்றும் அவர் தனது வீதியுலாவின் போது பொதுமக்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுளளார்.

    அதன் போது பொதுமக்கள் இறைவன், கடாபி மற்றும் லிபியாவைத் தவிர தமக்கு வேறெதுவும் தேவையில்லையென்று பொதுமக்களும் உரத்த குரலில் சப்தமிட்டுள்ளனர்.

    கடாபி பயணித்த வீதிகளில் அதற்கு சில வினாடிகள் முன்பாகவே நேட்டோ படையினரின் குண்டு வீச்சுகள் இடம்பெற்றிருந்தது. ஆரம்பத்தில் அதனை மறுத்த நேட்டோ படையினர் பின்பு அதனை ஏற்றுக் கொண்டனர்.

    ReplyDelete