Saturday, March 26, 2011

அகதியந்தஸ்தும் அதற்கான விசாரணை என்ற கொடுமையும்!!

அகதி என்றால் குறிப்பிட்ட காரணிகளால் பாதிக்கப்பட்டு தனது இருப்பிடத்தில் இருந்தால் உயிரபாயம் ஏற்படும் என்பதால் இன்னொருவரிடம் அல்லது நாட்டில் அடைக்கலம் கேட்டவர்.இது சரியான வரைவிலக்கணம் என்றே நினைக்கின்றேன்.தனது பொருளாதாரம்,இடம் போன்றவற்றை இழந்து அல்லது விட்டுவிட்டு உயிரை காக்குமுகமாக பல சோகங்களை,துன்பங்களை,இழப்புக்களை சுமந்து இன்னொருவர் தயவில் வாழும் நிலைக்கு ஆட்பட்டவனே அகதி.உறவுகளைக்கூட இழந்த நிலையில் வருபவனை உண்மை அரவணைப்புடனே மனிதாபத்துடனே நடாத்துகிறார்களா  என்றால் ´இல்லை` என்பதே வேதனை தரும் கசப்பான உண்மை!!
அன்று இராம பக்தனான அனுமனிடம் தஞ்சமடைந்த ஒரு மன்னனுக்காக,கொடுத்த வாக்குக்காக(மன்னனின் உயிரை பாதுகாப்பதாக அன்னை அஞ்சலிதேவிக்கும் அம்மன்னனுக்கும்  எதற்காக யாரிடமிருந்து என்று கேளாமலே உயிரச்சத்தில் வருபவனை பாதுகாப்பதே வீரனின் கடமை என்பதால் மட்டுமே வாக்கு கொடுத்தான் அனுமன்)தன்னால் மிகமிக நேசிக்கப்படும் இராமனிடம் போரிட்டு சத்தியத்தை உரைத்தான்,இன்று கதையை திரிக்கின்றனர் என்பது வேறு!!
தஞ்சமளித்தல் என்றால் உயிரச்சத்தில் வருபவரை காரணம் கேட்டு அத்தாட்டிப்பத்திரங்கள் கேட்டு கொடுமைப்படுத்தளல்ல என்பதை இதன் மூலம் புரிந்து கொண்டிருந்தால் இன்று இந்தியாவிலும் மற்றைய தேசங்களிலும் தஞ்சமடைந்த இலங்கைதமிழர் விசாரணைக் கொடுமைகளை  சுமந்திருப்பார்களா??விருப்புக்கு மாறாக அடைத்துவைக்கப்பட்டிருப்பார்களா?? கட்டாய திருப்பி அனுப்பலுக்கு உட்பட்டிருப்பார்களா??சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்களா!!உன்னிடம் இருக்கும் சிறிய ரொட்டியில் பாதியை இன்னொருவரின் பசிக்கு கொடு என்ற ஜெசுஸ் அன்பை,அரவணைப்பை போதிக்க, அவர் வழியை பின்பற்றும் நாடுகளோ போரையும் அகதிகளை கட்டுப்படுத்தும் சட்ட்டங்களையுமே மேற்கொள்கின்றன!!நிறவெதிர்ப்பும் இவர்களிடமே அதிகம்.பணத்தைக்கொண்டு மதமாற்றம் செய்வதில் ஈடுபடும் இவர்கள் மனதளவில் மனிதம் அற்றவர்களாகவே உள்ளனர்!!இந்துமதம் அன்பின் இருப்பிடம்,ஆனாலோ இந்தியா வறுமையில் மக்கள்வாட பாதுகாப்புக்கென பல கொடிகளை ஒதுக்குகின்றது.ஆயுதங்களை குவிக்கின்றது.மக்கள் பட்டினியால் இறக்க எதற்காக நாட்டை எதிரியிடமிருந்து பாதுகாக்கிறார்களோ!!மகாபாரதம் என்ன கூறியது என்பதே இவர்களுக்கு புரியவில்லை.
சொந்தநாட்டில் அகதியாக அறிவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் அந்நிய நாடுகளால் அகதியல்ல என நிராகரிக்கப்படுவதற்கு  என்ன காரணம் என்கிறீர்கள்??பணம்தான் காரணம்.அன்பு அழிவதுதான் காரணம்!!
பாதிக்கப்பட்டாவரை பழையவற்றை கேட்டு,நினைவுபடுத்தி துன்பப்படுத்திவிட்டு,மாடுகள் போல பட்டிகளில் அடைத்துவைத்துவிட்டு இறுதியில் நாட்டில் பிரச்சனை,அது பொதுப்பிரச்சனை உனக்கு பிரச்சனை இல்லை என்று மேலும் நோகடித்து கட்டாய வெளியேற்றம் செய்யும் நாடுகள் இறை சாபத்தை தேடுகின்றன .அகதிகளை நோகடிக்கும் நாடுகளும் தஞ்சம் தரும் நாடுகளை ஏமாற்றி,துரோகமிழைக்கும் மக்களும் சாபத்துக்கு ஆளாகிறார்கள்.இவர்களுக்கு நிச்சயம் ஆண்டவன் சந்நிதியில் பாரிய தண்டனைகள் உண்டு!!

No comments:

Post a Comment