Thursday, July 19, 2018

இனியாவது அகதிகள் மீது பாகுபாடு ஒழியட்டும்: பிரான்ஸ் வெற்றி குறித்து பிரபலத்தின் நெகிழ்ச்சிக் கருத்து!


பல ஆப்பிரிக்கர்களைக் கொண்ட பிரான்ஸ் கால் பந்து அணியின் வெற்றி குறித்து வெனிசுவேலா அதிபர் Nicolas Maduro, பிரான்சுக்காக ஆப்பிரிக்கா கால்பந்து கோப்பையை வாங்கிக் கொடுத்துள்ளது, இனியாவது ஐரோப்பா அகதிகளுக்கெதிரான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தலைநகரான Caracasஇல் பேசிய Maduro, இவ்வாறு பேசியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
“ஆப்பிரிக்க அணி போல் தோற்றமளிக்கும் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது, உண்மையில் இது ஆப்பிரிக்காவின் வெற்றி, பிரான்சுக்கு புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஐரோப்பா புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்...” இனியாவது ஐரோப்பாவில் ஆப்பிரிக்க மக்களுக்கு எதிரான இனவெறி வேண்டாம், புலம்பெயர்வோருக்கு எதிரான பாகுபாடு வேண்டாம்” என்று Maduro கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் குரோவேஷியா அணியை 4 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடையச் செய்தது.
பிரான்ஸ் அணி பல இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாகும். அந்த அணியின் 23 வீரர்களில் 15 பேர் ஆப்பிரிக்க வம்சாவழியினர் ஆவர்.


http://news.lankasri.com/france/03/183718?ref=ls_d_france

No comments:

Post a Comment