Wednesday, July 18, 2018

நாள்பட்ட உணவு... அசுத்தமான கழிவறைகள்: அகதிச்சிறுவர்களை வாட்டி வதைத்த டிரம்ப் அரசாங்கம் !


அமெரிக்காவில் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட அகதிச் சிறுவர்களை வெறும் தரையில் படுக்க வைத்ததாகவும் நாள்பட்ட உணவுகளை உண்ணத் தந்ததாகவும் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ எல்லையில் இருந்து சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரித்த டிரம்ப் அரசாங்கம், அவர்களை தனியாக ஒரு முகாமில் தங்க வைத்துள்ளது.
குறித்த முகாமில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக ஆர்வலர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
டிரம்ப் அரசாங்கத்தால் பிரிக்கப்பட்ட அகதிச்சிறுவர்களை தனியாக அமைக்கப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நாள்பட்ட உணவை வழங்கியதாகவும், கழிவறைகள் நாட்கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் குறித்த அகதிச்சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி போர்வைகள் எதுவும் வழங்கப்படாததால் வெறும் தரையிலேயே இரவு படுத்துறங்கியதாகவும், இரவு முழுவதும் விளக்கு வெட்டம் இருந்ததால் தங்களால் கண்மூடி தூங்கவும் முடியாத நிலை இருந்ததாகவும் அச்சிறுவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி முதிர்ந்த சிறுவர்களை கூண்டு போன்ற அறையிலும் தங்க வைக்கப்பட்டதால், பயத்தில் பெரும்பாலான சிறுவர்கள் அழுதபடியே இருந்துள்ளனர்.
தங்கள் பெற்றோரை இனி சந்திக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் பல சிறுவர்கள் சோர்ந்துபோனதாகவும், போதிய உணவு, தண்ணீர் என எதுவும் இன்றி தவிக்க நேர்ந்ததாகவும் அந்தச் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகள் பலர் தங்கள் பெற்றோரிடம் அனுப்புங்கள் என குரல் எழுப்பி அழுதும், காவலர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பெண் காவலர்கள் மிக கொடூரமாக நடந்து கொண்டதாகவும், நாய்க்கூண்டில் அடைபட்டது போன்றே இருந்தது எனவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://news.lankasri.com/usa/03/183710?ref=ls_d_world

No comments:

Post a Comment