Tuesday, May 22, 2018

மரணத்தின் விளிம்பில் நிற்பவருக்கு கனடா செய்த மிகபெரிய உதவி!


புற்றுநோய் முற்றி மரணத்தின் விளிம்பில் நிற்கும் லெபனான் நாட்டவரைக் காண அவரது குடும்பத்திற்கு தற்காலிக விசாக்களை வழங்கி கனடா உதவியுள்ளது.
அவருக்கு புற்றுநோய் இருப்பதும் அது முற்றிய நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. பெருங்குடலில் ஏற்பட்ட புற்றுநோய் பின்னர் நெஞ்சு வரைக்கும் பரவி விட்டது.
அபாயகரமான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ளவிருக்கும் அவரோடு இருப்பதற்காக அவரது மனைவியும் பிள்ளைகளும் விசாவுக்காக விண்ணப்பித்த கோரிக்கை முதலில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
கனடாவுக்கு வந்தால் அவர்களைப் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு வசதியுள்ளதா என்பதையும் அவர்கள் பின்னர் லெபனானுக்கு திரும்பிச் செல்வார்களா என்பதையும் அவர்களால் உறுதியாகக் கூற இயலாததால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த Taha, தான் தனிமையில் வாடுவதாகவும் தனக்கு கனடாவில் யாருமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
என் குடும்பத்தை மீண்டும் சந்திக்க வேண்டும் என தினமும் இறைவனிடம் வேண்டுகிறேன் என்றும் அவர் உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.
பேட்டியைக் கேட்ட கனேடியர்கள் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து Tahaவுக்கு கடிதம் எழுதினார்கள். மாண்ட்ரியலைச் சேர்ந்த ஒருவர் Tahaவை நண்பராக ஏற்றுக்கொள்வதாகவும், Taha சிகிச்சை பெறும்போது அவருடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் Tahaவின் மருத்துவர்களும் வழக்கறிஞரும் புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு நேரடியாக கோரிக்கை வைத்தார்கள். அதனால் தற்போது Tahaவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tahaவின் மனைவி, 3 மற்றும் 7 வயதுள்ள அவரது குழந்தைகள் ஆகியோருக்கு கனடா தற்காலிக விசாக்களை வழங்குவதால் அவரது அறுவை சிகிச்சைக்குமுன் அவர்கள் கனடாவிற்கு வருகை தருகிறார்கள்.
இந்த செய்தி Taha, அவரது மருத்துவர்கள், வழக்கறிஞர் மற்றும் அவரது நலன் விரும்பிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

http://www.canadamirror.com/canada/04/173527?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment