Wednesday, May 23, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

தனியாத பதற்றம்.. பொதுமக்கள் மீது இரப்பர் குண்டு வீசிய காவல்துறை.!


நச்சு கழிவுகளை வெளியிடும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனக்கோரி நெடுநாட்களாக போராடி வந்த அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போது, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அநியாயமாக 12 பேரை சுட்டுக்கொன்றது காவல்துறை.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகும் அப்பகுதியில் பதற்றம் தனியாத காரணத்தினால் அதிகளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், தூத்துக்குடி - அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பொதுமக்களை கலைப்பதற்காக அவர்கள் மீது இரப்பர் குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளது காவல்துறை.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக 2 வார காலத்திற்குள்ளாக தமிழக அரசும், காவல் துறை டிஜிபியும் விளக்கமளிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.ibctamil.com/india/80/100966?ref=ls_d_ibc

தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட கோரி அப்பகுதி மக்கள் நெடுங்காலமாகவே பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அந்த வகையில் கடந்த 99 நாட்களாக அறவழியில் யாருக்கும் எத்தகைய தீங்கும் இழைத்திடாமல் போராடி வந்த மக்கள், நேற்றைய தினம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று ஆலையை மூடுமாறு மனு கொடுக்க சென்றனர்.
ஆனால், இதுவரையில் அம்மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்திடாத தமிழக அரசு, அம்மக்கள் அனுமதியின்றி கூடுவதாக தெரிவித்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததுடன் அநியாயமாக 12 பொதுமக்களை சுட்டு வீழ்த்தியது.
தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை கிளப்பியுள்ள இந்த சம்பவம் குறித்து தனது கடுமையான கண்டனங்களை சமூக ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்பாளர்களும் வெளியிட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக 2 வார காலத்திற்குள்ளாக தமிழக அரசும், காவல் துறை டி.ஜி.பியும் விளக்கமளிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களை வாங்கமாட்டோமென தெரிவித்து இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment