Wednesday, May 16, 2018

இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மை: ராஜித


இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களுடனான காரசாரமான விவாதத்தின்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டதாக ஊடகவியலாளர்கள் வாதம் முன்வைக்க அதற்கு பதிலளித்த அமைச்சர், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் பயங்கரவாதிகள் மாத்திரமல்ல பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது நான் மட்டுமல்ல. பலரும் அறிந்த உண்மை எனத் தெரிவித்த ராஜித, அவ்வாறாயின் 1988 கலவரத்தில் உயிரிழந்த அனைவரும் ஜே.வி.பி. பயங்கரவாதிகளா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆனால், ஜே.வி.பி. போன்றில்லை, விடுதலை புலிகள் என்பது சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டதொரு அமைப்பு என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்ட. அதற்கு அவர்கள் சிங்களவர்கள், இவர்கள் தமிழர்கள் என்பதுதான் உங்கள் பிரச்சினையா என கேள்வி எழுப்பியதுடன், அப்படியாயின், ஜே.வி.பி.-இன் விஜயவீரவிற்கும், பிரபாகரனுக்கும் இடையிலான வித்தியாசத்தை கூறுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவ்வாறாயின் சர்வதேசத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர்கள் வினவியதற்கு, இல்லை என பதிலளித்த அமைச்சர், சர்வதேசத்திடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டிய அவசியமே காணப்படுகிறது எனத் தெரிவித்தார்

http://www.jvpnews.com/srilanka/04/172855

கொழும்பில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர்



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஊடகவியலாளர் சந்திப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாகாண சபை அமைச்சரினால் போர் நிறைவடைந்த தினத்தை தேசிய துக்க தினமாக அறிவிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்தியாளர்கள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு அமைச்சர் வழங்கிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழுப்பப்பட்ட அந்தக் கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர் ராஜித சேனாரத்ன,
“மக்கள் விடுதலை முன்னணியினரும் தற்போதும் ஒவ்வொரு வருடமும் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
நடைபெற்று முடிந்த போரில் உயிரிழந்தவர்கள் எங்களுக்கு தீவிரவாதியாக தெரிந்தாலும், வடக்கு மக்களுக்கு அவர்களின் பெற்றோர், சகோதரர், சகோதரிகளிகளாகவே தெரிகின்றனர்.
வடக்கில் உயிரிழந்தவர்களும் எங்கள் பிள்ளைகள் தான். அரசாங்க தரப்பில் உயிரிழந்தவர்களும் நாட்டின் பிள்ளைகள் தான் என்று குறிப்பிட்டார் அமைச்சர்.
தமிழீழ விடுதலை புலிகள் தீவிரவாத அமைப்பு என்று ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியும் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும் என்றார் அமைச்சர்.
இதேவேளை, மே 18ஆம் திகதியில் நடத்தப்பட்டு வந்த இராணுவ வெற்றி கொண்டாட்டம் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர், போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரும் இந்நாட்டு பிள்ளைகள். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதுவொருபுறமிருக்க, மக்கள் விடுதலை முன்னணியின் ரோஹன விஜயவீர அவர்கள் மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களின் மாற்றத்தை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் சவால் விட்டமையினால் ஊடகவியலாளர் சந்திப்பு சூடான நிலைக்கு சென்றுள்ளது.
அதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவர்கள் என அமைச்சர் விழித்துக் குறிப்பிட்டமை சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/182797?ref=imp-news

No comments:

Post a Comment