Thursday, May 24, 2018

மேகன் மெர்க்கலை கிண்டலடித்த ஜேர்மன் நிறுவனம் மன்னிப்புக் கோரியது


மேகன் மெர்க்கலை அவரது நிறத்தைக் கிண்டலடிக்கும் வகையில், இன வெறுப்பைத் தூண்டும் விதமாக ஒரு சாக்லேட்டுடன் ஒப்பிட்ட பிரபல ஜேர்மன் நிறுவனம் ஒன்று சமூக ஊடகங்களில் மக்கள் கொதித்தெழுந்ததைக் கண்டு மன்னிப்புக் கோரியுள்ளது.
ஜேர்மனியின் பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் Super Dickmann's. உலகமே இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சாக்லேட் ஒன்று திருமண உடை அணிந்து போஸ் கொடுப்பது போன்ற படம் ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.
சனிக்கிழமையன்று புன்னகைக்கும் சாக்லேட் மணப்பெண் தேவாலயத்தில் நிற்கும் படம் ஒன்றை பதிவிட்ட அந்நிறுவனம், அந்த படத்திற்கு கீழே, ”என்ன பார்க்கிறீர்கள், இன்று நீங்களும் மேகனாக விரும்பவில்லையா?” என்னும் வாசகத்தையும் பதிவிட்டிருந்தது.

உடனடியாக அந்தப் படத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் சமூக ஊடகங்களில் Super Dickmann's இன வெறியைத் தூண்டுவதாக குற்றம் சாட்டினர். கலப்பினப் பெண்ணான மேகன் மெர்க்கல் பிரித்தானிய இளவரசர் ஹரியைத் திருமணம் செய்த அன்று பல ஊடகங்கள் அவரது நிறம் குறித்தே செய்திகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் Super Dickmann's நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான Bernd Roessler அந்த பதிவை அகற்றியதோடு, அது “முட்டாள்தனமான மற்றும் தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிவு” என்றும் கூறி, யோசிக்காமல் செய்துவிட்டதாகமன்னிப்புக் கோரியுள்ளார்.

http://news.lankasri.com/germany/03/179447?ref=ls_d_germany

No comments:

Post a Comment