Monday, May 21, 2018

அவுஸ்திரேலிய விஞ்ஞானியின் தற்கொலையை வியாபாரமாக்குவதாக சீற்றம்: விளாசும் சுவிஸ் பிஷப்


சமீபத்தில் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொண்ட அவுஸ்திரேலிய விஞ்ஞானியின் மரணம் குறித்த செய்தி பெரிதுபடுத்தப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ள சுவிஸ் பிஷப்பான Felix Gmür, தற்கொலையை வியாபாரமாக்குவது சக மனிதர்கள் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழக்கச் செய்யும் செயலுக்கு உதவுவதாகும் என்று கூறியுள்ளார்.
104 வயதான அவுஸ்திரேலிய விஞ்ஞானியான டேவிட் குடால் மருத்துவர்கள் உதவியுடன் தனது உயிரை விட்ட சம்பவம் குறித்து பேசும்போது, Basel பிஷப் Felix Gmür இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் தற்கொலை செய்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு வருகிறார்கள், அதை பொது சுதந்திரம்போல் கருதி வியாபாரமாக்குகிறார்கள் என்று கூறியுள்ள Felix Gmür, தற்கொலையை வியாபாரமாக்குவது அவமானத்திற்குரிய விடயம் என்று கூறினார்.

டேவிட் குடால் மருத்துவர்கள் உதவியுடன் தனது உயிரை விட்ட சம்பவம் பெரிதாக்கப்பட்டது. ஒரு தவறான சமிக்ஞையை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இனி வேலையற்றவர்களும் மன அழுத்தத்திற்குள்ளாகும் ஓய்வு பெற்றவர்களும் தங்களுக்கு வாழ்வதற்கான உரிமை இல்லை என சிந்திக்கும் மன நிலைமையை இந்த செய்தி உருவாக்கி விடலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்.
Swiss Bishops’ Conference என்னும் அமைப்பு, மருத்துவர்கள் உதவியுடன் உயிரை விடுவதற்கும், தற்கொலைக்கும் எதிரானதாகும்.
சுவிட்சர்லாந்து, மருத்துவர்கள் உதவியுடன் உயிரை விடுவதற்கு உதவும் நாடுகளில் ஒன்றாகும், அங்கு ஒருவர் தன் விருப்பப்படி உயிரை விட விரும்பினால், அவருக்கு தானே தன் உடலில் செலுத்தி கொள்வதற்கான நச்சுத்தன்மை கொண்ட மருந்து கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/swiss/03/179285?ref=ls_d_swiss

No comments:

Post a Comment