Monday, May 14, 2018

சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு தொடர்ந்தும் கௌரவம்!


சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும் என அந்நாட்டு வர்த்த உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மொழியை காப்பதற்கு, அந்நாட்டு அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதில், அரசு உறுதியாக உள்ளதாவும் இளைஞர்கள் தினந்தோறும், அதிகளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி, அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், இளைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூரில், அதிகாரபூர்வ நான்கு மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்றாக காணப்படுகிறதுடன், பாடசாலைகளில், தாய் மொழியாகவும், தமிழ் மொழி போதிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் அரசு நிகழ்ச்சிகளிலும் அந்நாட்டு நாணயமான சிங்கப்பூர் டொலரிலும், தமிழ் மொழி இடம் பெற்றுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

No comments:

Post a Comment