Sunday, May 27, 2018

பௌத்தம் சிங்களவர்களுடையது இல்லை! தேரர் அதிரடிக் கருத்து


பௌத்தம் சிங்கள மக்களுக்குரிய மதம் என சிங்களவர்கள் எண்ணினாலும் பௌத்த தர்மம் என்பது எவருக்கும் சொந்தமானதல்ல என அமரபுர மஹ சங்க சபையின் தேரரான பேராசிரியர் பள்ளேகந்தே ரதனசார தேரர் தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டிய வெலிதர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பல ஜாதிகளாகவும் குலங்களாகவும் பிரிந்து கிடந்தனர். அவர்களை இந்த பிரிவினையில் இருந்து புத்த பகவானே விடுவித்தார். இதற்காக இளவரசர் சித்தார்த்தன் அரச மாளிகையில் இருந்து வெளியேறினார்.
பிறப்பினால் ஒருவன் தாழ்ந்தவனாகவோ அல்லது பிரமணனாகவோ பிறப்பதில்லை என புத்த பகவான் கூறியுள்ளார்.
இலங்கையில் அமரபுர மஹா பௌத்த பீடம் இந்த பின்னணியிலேயே உருவாகியது. இதன் காரணமாக இலங்கையின் கரையோர பிரதேசங்களை சேர்ந்த பலர் துறவரம் பூண்டனர். மலை நாட்டில் காணப்பட்ட சில ஜாதீய பேதங்களால் நாட்டு மக்களில் பலருக்கு துறவரம் பூணமுடியாமல் இருந்தது.
பௌத்த மதம் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற நிலையில் செயற்பட்டதே இதற்கு காரணம்.
பௌத்த மதம் சிங்களவர்களின் மதம் என சிங்களவர்கள் நினைக்கின்றனர். அப்படியானால் தமிழ் பௌத்தர்களும், வேறு நாடுகளை சேர்ந்த பௌத்தர்களும் என்ன கூறுவார்கள். பௌத்த தர்மம் எவருக்கும் சொந்தமானதல்ல.
பௌத்த மதம் எமக்கு மட்டுமே சொந்தமானது என்று சொந்தம் கொண்டாடுவதன் மூலம் பௌத்த சாசனத்தை கட்டியெழுப்பவதில் தடையேற்படும் என்பதுடன் பௌத்த சாசனமும் அழிந்து போகும்.
ஞானவிமல தேரர் அன்று பர்மாவுக்கு சென்று அமரபுர பௌத்த பீடத்திற்கான பௌத்த பிரிவை கொண்டு வந்த போது, அப்போது நாட்டை ஆட்சி செய்த ஒல்லாந்தர்கள் விரும்பவில்லை. அப்போது பலப்பிட்டிய மஹா பத்தே பகுதியின் முதலிமார் கருவா பட்டை தொழிலில் ஈடுபடாது வேலை நிறுத்த செய்து துறவரம் பூணும் உபசம்பத உரிமையை பெற்றுக்கொண்டனர்.
அப்படியில்லை என்றால் இலங்கையின் கரையோர பகுதிகளை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ தழுவியிருப்பார்கள். அமரபுர மஹா பௌத்த பீட உருவாக்கப்பட்டதன் காரணமாகவே நாட்டை அதில் இருந்து காப்பற்ற முடிந்தது என பேராசிரியர் பள்ளேகந்தே ரதனசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/religion/01/183735?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment