Wednesday, May 23, 2018

லண்டனில் இலங்கை இளைஞனை கொலை செய்த மற்றுமொரு தமிழன்! சம்பவத்தை நேரில் கண்ட இளம் பெண்


பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கொலைச் சம்பவத்துடன் மற்றுமொரு தமிழர் தொடர்புபட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வைத்து இலங்கையை சேர்ந்த 28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைச் சம்பவத்துடன் மணிமாறன் செல்லையா என்ற 44 வயதுடைய தமிழரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மணிமாறன் ஏற்கனவே 35 வயதான நபர் ஒருவரின் உடலில் காயம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நேற்று Wimbledon நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் இன ரீதியாக தாக்குதல் அல்லவென பொலிஸ் தலைமை ஆய்வாளார் Simon Harding தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூகம் மற்றும் சுற்றி இருக்கும் குழுக்களின் உதவிகளை விசாரணைகளுக்காக எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
அருனேஷ் தங்கராஜா கொலை செய்யப்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் லண்டனில் மற்றுமொரு நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய நேரப்படி நேற்று முன்தினம் மாலை வடக்கு லண்டன் Islington பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதாகவும், இது தொடர்பில் முறைப்பாடு செய்ய யாராவது முன்வருவார்கள் என பொலிஸார் எதிர்பாரத்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வடக்கு லண்டன் தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி காட்சிகளை ஆராய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தை அங்கிருந்த இளம் பெண் உட்பட பலர் நேரில் பார்த்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சியை பலர் அவதானித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியாகவில்லை. இந்த கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இலங்கையர் கொலை செய்யப்பட்டதனை அடுத்து இடம்பெற்ற இரண்டாவது கொலை இதுவென லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/uk/01/183400?ref=home-latest

No comments:

Post a Comment