Wednesday, April 18, 2018

‘சாதூர்யம் பேசாதடி என் சதங்கைக்குப் பதில் சொல்லடி’-வஞ்சிக்கோட்டை வாலிபன்.ஜெமினி ஸ்டுடியோவின் பிரமிப்பூட்டும் படைப்பு வஞ்சிக்கோட்டை வாலிபன். எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்க வாசன் முடிவு செய்தார்.நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். தீவிர கவனம் செலுத்திய நேரம்.வாசனுக்கு அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. ஜெமினிகணேசன் நாயகன் ஆனார்.‘காதல் மன்னன்’ ஆக்ஷன் ஹீரோவா ! ஜனங்கள் படம் பார்க்க வர வேண்டுமே. ஸ்பெஷல் எபெக்ட் தேவைப்பட்டது வாசனுக்கு. 
‘அகில இந்திய நாட்டிய நட்சத்திரங்கள் பத்மினி- வைஜெயந்திமாலா இருவரையும் முதலும் கடைசியுமாக ஒரே மேடையில் போட்டி போட்டு நடனமாட விட்டார். ’வஞ்சிக்கோட்டை வாலிபனின் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்கிறப் பாடலுக்கான நடனம் வைஜெயந்தியின் கலைவாழ்வில் நிச்சயம் ஒரு காலப் பெட்டகம் ! ஏறக்குறைய ஒன்பது நிமிடங்கள் பத்மினியும்-வைஜெயந்தி மாலாவும் ஆடிய ‘சாதூர்யம் பேசாதடி என் சதங்கைக்குப் பதில் சொல்லடி’ நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கும்.
வாசன் சாருக்கு வைஜெயந்திமாலாவையும்
பத்மினியையும் வைத்து, ஒரு போட்டி நடனம் எடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியதோ தெரியாது. . இந்த விஷயம் ரெண்டு பேருக்கும் சொல்லப்பட்டதும், ரொம்பவே தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். ஓயாமல் ஒத்திகைகள். ஒவ்வொரு நாளும் புதுப்புது முத்திரைகள்...இப்பவும் சிலர் இந்த நடனத்துக்காகவே, வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை நாற்பது ஐம்பது தடவை பார்த்ததாகச் சொல்கிறார்கள்.அதில் ஆச்சரியம் கிடையாது. காரணம் அப்பாடலுக்காக அவர்கள் இருவரும் உழைத்த உழைப்பு அப்படி.
நாட்டியப் போட்டியில் யார் ஜெயிச்சாங்க என்கிற மாதிரி காட்சி இல்லை. ஆனா முழுப்
பாடலுக்குள்ளும் இருவரது திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதே வாசன் சாரின் விருப்பம் இன்னும் சொல்லப் போனால் போட்டா போட்டி நடனங்களே வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்துதான் ஆரம்பித்தன என்று கூறலாம். - வைஜெயந்திமாலா சேர்ந்து ஆடினது ரெண்டு நாள்கள் மட்டுமே. மற்றபடி வைஜெயந்திமாலா தனிப்பட்டக் காட்சியை 12 நாள்கள் எடுத்தார்கள்.
அதாவது தனித்தனி ஷாட்டுகள். ஒவ்வொரு நாளும் நம்மோட பார்ட்டை நல்லபடியா செய்யனும்.
பப்பியம்மா(பத்மினி) பண்ணினதை விடவும் பெட்டரா பண்ணணும்னு நினைச்சிக்கிட்டே டான்ஸ் மூவ்மெண்ட் கொடுத்தார் வைஜெயந்திமாலா.
ஒவ்வொரு நடன முத்திரையையும் பார்த்துப் பார்த்துத் ஈடுபாடு காட்டி அக்கறையோட செய்தார்.
அதே மனநிலையோடத் தன் பங்களிப்பை பத்மினி
கொடுத்தார்..
பாடல் காட்சியை ரஷ் போட்டுப் பார்த்ததுமே
எங்கள் இருவருக்கும் ஒரே பாராட்டுமழை . அப்பவே வஞ்சிக்கோட்டை வாலிபன் பேசப்படுகிற அளவுக்கு, சாதுர்யம் பேசாதடி பாடலும் அதன் காட்சியும் சூப்பர் ஹிட் ஆகும்னு முடிவாகியது.
நடனத்தின் நடுவில் பி.எஸ்.வீரப்பா, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்லுவார்.நாட்டியம் சிலாகித்து பேசப்பட அதுவும் காரணமாகி விட்டது.
ஏறக்குறைய ஆட்டம் பூர்த்தியாகும் தருணம். பத்திரிகையாளர் ‘நாரதர்’ ஸ்ரீனிவாசராவிடம் நயமாகக் கூறப்பட்ட விஷயம்,
பத்மினி போட்டியின் முடிவில் தோற்பதாகக் காட்டக் கூடாது. நாரதர் ஸார்! உங்க பாஸ் கிட்டக் கண்டிப்பாச் சொல்லிடுங்க.எங்க பப்பி எவ்வளவு பெரிய டான்ஸர் என்பது உங்களுக்கே தெரியும்.அவள் தோல்வி அடைவதாகக் காட்டினால், அவளுடைய பெயர் கெட்டுப் போகும் ஆமா!அவள் ஜெயிக்காமல் போவதாக நீங்கள் எடுப்பதானால், பப்பி ஷூட்டிங் வரமாட்டாள்.பத்மினியின் தாயார் சரஸ்வதி அம்மாள் சர்ச்சையைக் கிளப்பினார்.
சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் சளைத்தவரில்லை. வைஜெயந்தி மாலாவின் பாட்டி யதுகிரி. அவரும் தன் பேத்திக்காக உரிமைக்குரல் கொடுத்தார்.எங்க பாப்பா தோற்பதாகக் காட்டக் கூடாது.நாரதர் நடந்ததை முதலாளியிடம் விளக்கினார்.
இரண்டு நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டார் வாசன். பப்பி - பாப்பா இருவரில் யார் வெற்றி பெற்றாலும் தனக்குச் சங்கடம் என்பது புரிந்தது. காட்சி 
சமயோசிதத்துடன் மாறியது. வைஜெயந்தியும் 
பத்மினியும் ஆக்ரோஷமாக ஆடிடும் உச்சக்கட்டம். ‘ சபாஷ் சரியான போட்டி’ என்பார் பி.எஸ். வீரப்பா.
யாருக்கு வெற்றி என்பது தெரிவதற்குள், ஜெமினி விளக்கை அணைத்து விடுவார்.தென் இந்தியாவில் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியின் பெயரும், வடக்கில் அதன் இந்திப் பதிப்பான ‘ராஜ்திலக்’ கில் வைஜெயந்தியின் பெயரும் டைட்டிலில் முதல் இடம் பிடித்தன.

No comments:

Post a Comment