Saturday, April 21, 2018

பிரித்தானிய மகாராணி இப்படியா ஆடை அணிவது? ட்ரோல் செய்த டுவிட்டர்வாசிகள் -


லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அங்கு சென்ற பிரதமர் மோடி, பிரித்தானிய மகாராணியை சந்தித்து உரையாடியுள்ளார்.
மோடியை கைகுலுக்கி வரவேற்ற மகாராணி, அவருடன் அமர்ந்து சிறிது நேரம் உரையாடியுள்ளார். மோடியை சந்தித்த போது மாகாராணி எலிசபெத், தங்கள் நாட்டு ஆடையை அணிந்திருந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், நடிகை ப்ரியங்கா சோப்ரா மோடியை சந்திக்கும்போது, குட்டை பாவடை அணிந்திருந்தார் என்பதற்காக அனைவராலும் விமர்சனத்துக்கு ஆளானார்.
ஆனால், பிரதமர் மோடியை சந்திக்கும் போது எலிசபெத் அவர்கள், ஒரு நாட்டின் பிரதமர் என்று கருதாமல் சாதாரண ஆடையை அணிந்திருக்கிறார்கள் என்று டுவிட்டரில் ட்ரோல் செய்துள்ளனர்.


ஆனால், மகாராணி அணிந்திருப்பது formal dress. இன்று நாம யாரை சந்திக்கப்போகிறோம் என்பது ஒரு நாட்டின் மகாராணிக்கு தெரியும்.
அப்படியிருக்கையில் இப்படி முட்டாள்தனமாக விமர்சனம் செய்யக்கூடாது என மகாராணிக்கு ஆதவாகவும் டுவிட்டரில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
மேலும், சிலர் கிண்டலாக இவர்கள் இருவரின் உரையாடலை மீம்ஸ்ஸாக போட்டுள்ளனர்.
எங்கள் நாட்டில் உள்ள ஒன்று உங்களிடம் இருக்கிறது என மோடி சொல்ல, என்ன கோஹீனுர் வைரமா என மகாராணி கேட்க.. அதற்கு மோடி இல்லை விஜய் மல்லையா என்கிறார்.
இப்படி கிண்டலாக மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.



 http://news.lankasri.com/uk/03/176915?ref=ls_d_uk

No comments:

Post a Comment