Wednesday, April 18, 2018

யாழில் பிரபாகரன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்! தடுப்பு முகாமில் உயிருடன் இருக்கும் தமிழர்களின் நிலை?


மடிந்துபோகும் மனச்சங்கிலியில் மடியாதது உறவுகள் தான், இன்று உறவுகளை துளைத்து விட்டு மண்ணில் மடிந்து கொண்டிருப்பதும் நம் தமிழ் உறவுகள்தான், தமிழன் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் அல்ல. இன அழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற இனம். தமிழன் மறக்கப்பட்டால், தமிழும் மறக்கப்பட்டு விடும்.
கொலை, கொள்ளை, வாள்வெட்டு என்று பல வழிகளில் இன அழிப்பு அரங்கேரி வருகின்றது. தமிழ் கலாச்சாரத்தில் உச்சத்திற்கு எடுத்து காட்டாக இருக்கும் யாழில் குற்ற செயல்கள் ஓய்ந்ததாக தெரிய வில்லை.
தாயகம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில், சமூக சீர்கேடுகள் அரிதாகவே இருந்தன. கொலை, கொள்ளை என்பன அற்ற தேசமாக காணப்பட்டது.
அது மட்டும் இன்றி பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேரி இருக்காது என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தாகவும் உள்ளது.
இந்த உலகில் எத்தனையோ இனங்கள் வாழுகின்றன. ஒவ்வொரு இனமும் ஏதோ ஒரு வகையில் தனது விடுதலையை போராடி பெற்றது.
ஆனால் தமிழ் இனம் மட்டும் தனது போராட்டத்தையே காப்பாற்ற முடியாமல் போன வரலாறு 2009இல் கண் முன் அறிங்கேறியது. இயற்கையோடும் ஒன்றித்த வாழ்க்கை இன்று சிதைக்கப்பட்டு திக்குவேறு திசைவேறாக ஈழத்தமிழினம் சிதைந்து போய்விட்டது.
கல்வி , வர்த்தகம், விவசாயம், தொழில் என்று புரட்சியால் முன்னேறி வந்த இனம் தான் இந்த தமிழ் இனம். ஆனால் அந்த முன்னேற்றத்தை எப்படியேனும் தடுத்து நிறுத்தி தமிழனின் வளர்ச்சியை வேர் அறுக்க தொடங்கி விட்டனர்.
யாழ்ப்பாணம் இதற்கு சிறந்த எடுத்து காட்டாக காணப்படுகின்றது. தமிழன் வரலாற்றை புரட்டிப் போட்டது போல, தமிழ் கலாச்சாரத்தையும் சீர் குழைத்து விட்டார்கள்.
தமிழர்களையும், தமிழ் இனத்தையும் அழிக்க எத்தனையோ உத்திகளை கையாண்டனர். அழிக்க நினைத்தது ஈழ தமிழினத்தைக் காக்க உருவாகிய விடுதலைப் புலிகளையல்ல, நான் தமிழன் என்று மார்த் தட்டி பெறுமை கொள்ளும் மறத் தமிழனை..
எதிரிகளின் ஆசையை போல தமிழன் போராட்டம் மௌனம் கண்டு விட்டது. இங்கு ஒரு விடயத்தை நினைவில் கொள்ளுங்கள் தமிழன் போராட்டம் மௌக்கப்பட்டு விட்டதே தவிர மரணிக்க வில்லை.
அன்று தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தின் ஆறாத வடுக்களாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஏக்கத்துடனும், கவலையுடனும் பதறிய நிலையில் தம்முயிர்களை துறந்த தமிழனின் வரலாறு எழுத முடியாத சோகம்..
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் காயங்கள் இன்னும் ஆற்றப்படவில்லை. கடந்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கை தொடர்பான விடயங்கள் நல்லாட்சியில் மறுக்கப்பட்டு வருகின்றது என்பது உண்மை.
இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நடத்தி வருகின்றனர்.
எனினும், காணாமல் போனவர்கள் பற்றி எந்த தகவலும், வெளிவராத நிலையில் நேற்றைய தினம் பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வெளியிட்ட தகவல் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 26ஆம் திகதி தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றதாகவும், தடுப்பு முகாம் காவலில் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.


அது மட்டும் இன்றி கால் பெருவிரல் நகத்தை பிடுங்கினார்கள். பல வேதனைகளையும் இழப்புக்களையும் சந்தித்தேன். பின்னர் 2017.12.26 அன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன். தற்போது 85 வயது அம்மம்மாவுடன் வவுனியாவில் வசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
என்னைப்போலவே பலரும் தடுப்பில் பல இன்னல்களை சந்தித்து வேதனைகளுடன் இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
பல தாய்மார் தங்கள் பிள்ளைகள் காணாமல் போய்விட்டதாக கூறுகின்றார்கள். ஆனால் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி உள்ளார்கள்.
இதனால் எனது உயிருக்கு ஆபத்து வந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இங்கு ஒரு விடயத்தை அழுத்தம் திருத்தமாக புரிந்து கொள்ள வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இனியும் தாமதிக்க முடியாது.
கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் வழங்க வேண்டிய கட்டாயம் நல்லாட்சிக்கு உண்டு.
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும். அதனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை முன் வைத்து தமிழர் தரப்பின் முக்கியமான அரசியல் அமைப்பாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மக்களின் கண்ணீரால் அந்த பிரதேசங்கள் தினமும் நனைந்து கொண்டிருக்கின்றன. போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் இரகசிய தடுப்பு முகாம்கள்,சிறைச்சாலைகள் என தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைக்க வேண்டும்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்கான இழப்பீடு சர்வதேச சட்ட நியாயங்களுக்கு ஏதுவான நிலையில் வழங்கப்பட வேண்டும்.
ஒரு உயிருக்கான விலை பணம் என்பது அல்ல. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் கட்டாயமானதே. அதே சமயம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குடும்பங்களை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொருப்பாகும்.
இப்படியான சூழ் நிலையில்தான் மிகுதி இறுக்கும் தமிழ் இனத்தை காப்பாற்ற முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

No comments:

Post a Comment