Thursday, April 19, 2018

தினமும் நூடுல்ஸ் சாப்பிடும் காளி! இந்த கோவிலை பற்றி தெரியுமா?


நூடுல்ஸ், சாப்ஸி, அரிசி மற்றும் காய்கறிகள், இப்படியெல்லாம் காளிக்கு படையல் இருக்குமா என்று யோசிக்கிறீர்களா?
இது இங்கே இருக்கும் காளியைப் பற்றிய தகவல் அல்ல, கொல்கத்தாவில் உள்ள Chinese Kali Temple பற்றியது தான்.
கொல்கத்தாவின் டாங்ரா பகுதி- இந்தியாவின் China Town என்று அழைக்கப்படுகிறது.
இந்த இடத்தில்தான் மேற்கண்ட காளியும் இருக்கிறாள், இந்திய சீனர்களுக்கிடையேயான பாலமாக மட்டுமல்லாமல் சீனர்களின் பலமாகவும் இவள் திகழ்கிறாள்.
காளி பூஜையின் போது இந்தியர்கள், சீனர்கள் ஒன்றாக இணைந்து பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
சராசரியாக ஏதேனும் ஒரு சீனர் இந்த இடத்தை கடக்கும் முன் தன் காலணிகளைக் கழற்றி, இக்கோயிலின் முன் நின்று ஒரு நிமிடம் பிராத்தனை செய்து செல்வதை இங்கு இயல்பான ஒரு விஷயமாக காண முடியும்.

கோவில் உருவான வரலாறு
60 வருடங்களுக்கு முன் ஒரு மரத்தின் கீழ் இரண்டு சிவப்பு குங்குமமிட்ட கற்களைத் தான் மக்கள் வழிபாட்டு வந்தனர்.
பின்னர் ஒருநாள் சீனாவை சேர்ந்த 10 வயது பையனுக்கு ஏதோ ஒரு நோய் தாக்கியுள்ளது. மருத்துவர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில், இந்த அம்மனின் முன் அந்த சிறுவனை படுக்க வைத்து பிரார்த்திக்க ஆரம்பித்தனர் அவன் பெற்றோர்.
இரவு பகல் பாராமல் தொடர்ந்து அவர்கள் செய்த பிரார்த்தனையில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது, மருத்துவர்களாலும் முடியாது என்று கைவிட்ட அந்த சிறுவன் நலமாக எழுந்து உட்கார்ந்தான்.
அன்றிலிருந்து இந்த இடம் மிக சக்தி உள்ள ஸ்தலமாகவும் அவர்களுக்குப் பிடித்த கோயிலாகவும் மாறியிருக்கிறது.
எங்களில் பெரும்பாலோனோர் புத்த மதம் சார்ந்தவர்கள், ஒரு சிலர் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் வேண்டிய வரம் தரும் தெய்வமாக இந்தக் காளி அன்னை இருக்கிறாள் என்று பெருமை பொங்க கூறுகிறார் சிறப்பு பூஜைகளில் பங்கெடுக்கும் ஐசன்.

12 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள க்ரானைட் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்த அந்த இரண்டு சுயம்பு கற்களும் இன்னமும் கோயிலில் இருக்கின்றன.
மேலும் இரண்டு காளி உருவ சிலைகளும் உள்ளே இருக்கின்றன, இதற்காக டாங்ராவிலுள்ள ஒவ்வொரு சீன குடும்பத்தாரும் ஆலயத்தையும் சிலைகளையும் கட்டியெழுப்ப பணம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி அன்று குறைந்தது 2000 சீனர்களாவது காளியின் சிறப்பு பூஜையில் பங்கேற்றுக் கொண்டு புஷ்பாஞ்சலி செய்து பிரசாதங்கள் பெற்று செல்வது வழக்கமாக இருக்கிறது.
முழுமையான இந்து முறைப்படியே இந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. எனினும் சில இடங்களில் சீனர்களின் மரபுகளும் அங்கு சிறிதாகக் கடைபிடிக்கப்படுகின்றன.
குறிப்பாக மெழுகு விளக்குகள் ஏற்றுவதும் மற்றும் சீனர்களின் சிறப்பு ஊதுபத்திகள் மூலம் அங்கு ஏற்படும் வாசனை வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு அனுபவமாக இருக்கும் என்று அவர்கள் பெருமையாகத் தெரிவிக்கின்றனர்.
விசித்திர பழக்கம்
இங்குள்ள இன்னொரு விசித்திரமான பழக்கம் தீய ஆவிகளை விரட்ட கைகளால் செய்த காகிதங்களை அம்மன் முன் எரிப்பது. இந்த செயலால் தீய ஆவி துர் சக்திகள் தங்களை நெருங்காது என்று இவர்கள் நம்புகின்றனர்.
இவர்கள் அம்மனை வணங்கும் முறையும் சீன முறைப்படிதான் வணங்குகிறார்கள்.
10 வருடங்களுக்கு முன் எனக்கொரு மகள் வேண்டும் என்று நிறை மாதக் கர்ப்பிணியாய் ஒரு தீபாவளி இரவில் இந்த அன்னையிடம் வேண்டிக் கொண்டேன்.
அடுத்த நாளே என் வேண்டுதலை நிறைவேற்றினாள் இந்த அன்னை அன்றிலிருந்து என் குடும்பத்தாருக்கு இவள் மீது பக்தி அதிகம் என்று நெகிழ்கிறார் மைக்கேல் வோங், இவருக்கு எட்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள்.


http://news.lankasri.com/special/03/176687?ref=ls_d_others

No comments:

Post a Comment