Saturday, February 11, 2012

உடல் நலம் தேறினார் பாடகி எஸ்.ஜானகி!!


தலையில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகி எஸ்.ஜானகி உடல் நலம் தேறியுள்ளார்.தென்னிந்திய திரையுலக பாடகி எஸ்.ஜானகி (73) குளியலறையில் வழுக்கி விழுந்ததால் காயமடைந்து சிம்ஸ் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தலையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு தையல் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார். 

தற்போது அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்றும், விரைவில் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என்றும் அவர் மகன் தெரிவித்துள்ளார். பாடகி ஜானகி திரையுலகில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல பாடல்களை தாமே எழுதி இசையமைத்துள்ளார். மேலும் சிறந்த பாடகியாக தெரிவு செய்யப்பட்டு 4முறை தேசிய விருது பெற்றவர் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment