Saturday, October 13, 2018

மத சுதந்திரத்தில் தலையிடுகிறது பிரான்ஸ்: குற்றம் சாட்டும் மனித உரிமைகள் கமிட்டி


முகத்தை மறைக்கும் வகையில் உடையணிவதை தடை செய்யும் பிரான்சின் 2010ஆம் ஆண்டு சட்டம் பாகுபாடு காட்டுவதாகவும் மத சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் மனித உரிமைகள் கமிட்டி பிரான்சை கேள்வி கேட்க இருக்கிறது.
2010ஆம் ஆண்டு பிரான்ஸ் சர்ச்சைக்குரிய பர்தா தடைச் சட்டத்தை இயற்றியது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியான நிலையில், மீண்டும் உலகத்தின் கவனம் பிரான்ஸ் மீது திரும்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கமிட்டி, விரைவில், பொது இடங்களில் தங்கள் முகத்தை மறைக்கும் வகையில் உடையணிவதைத் தடுக்கும் சட்டம், மத சுதந்திரத்திற்கெதிரானது என்றும், பெண்களுக்கு எதிரானது என்றும் கூறும் தனது முடிவை வெளியிட இருப்பதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் கமிட்டி, பல சர்வதேச நிபுணர்களைக் கொண்ட ஒரு ஆலோசனை அமைப்புதானேயொழிய, சட்ட மாற்றங்களைக் கொண்டு வரும் அளவிற்கு அதற்கு அதிகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டினால் அதிகம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த Redoine Faïd என்னும் சிறையிலிருந்து தப்பிய கொள்ளையன் கைது செய்யப்பட்டபோது, அவன் பர்தா அணிந்து மறைந்து வாழ்ந்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து மீண்டும் இந்த பிரச்சினை கிளம்பியிருக்கிறது.
பிரான்ஸ் சட்டத்தை கேள்வி கேட்கும்படி மனித உரிமைகள் கமிட்டி கேட்டுக்கொள்ளப்படுவது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே நர்ஸரி ஒன்றில் பணிபுரிந்த Fatima Afif என்னும் ஒரு பெண், தலையில் ஸ்கார்ப் அணிந்ததால் நிறுவன விதிகளை மீறியதாக வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக புகாரளிக்கப்பட்டதையடுத்து, மனித உரிமைகள் கமிட்டி விசாரணை நடத்தி தங்கள் முடிவை அறிவித்தது.
அது, Fatima Afif விடயத்தில், பிரான்ஸ், மத சுதந்திரத்தை மீறியுள்ளதாகவும், அந்த வழக்கு மனித உரிமைகள் மீதான சர்வதேச ஒப்பந்தங்களை மீறியுள்ளதாகவும் தீர்ப்பளித்தது.

https://news.lankasri.com/france/03/189948?ref=ls_d_france

No comments:

Post a Comment