Tuesday, August 21, 2018

இதுவரை இன ஆக்கிரமிப்பு! தற்போது மத ஆக்கிரமிப்பா??? கொதித்தெழும் மக்கள்!

அராசாங்கம் அநாகரிகமான முறையில் தமிழ் மக்களுடைய மத வழிபாட்டு உரிமையை நிர்மூலம் செய்வது ஜனநாயக பண்புக்கேற்ற விடயம் அல்ல என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேசந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவின் வெடுக்குநாறி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்தை மீட்டுத்தருமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து சற்றுதொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்ககுநாரி மலை அமைந்துள்ளது
இந்த மலைப்பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவனுடைய ,லிங்கம் காணப்படுவதுடன் ஒவ்வோரு வெள்ளிக்கிழமைகளிலும் அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
அத்துடன் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதியளிக்க முடியாது என நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திலும் தொல்பொருள் திணைக்களத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் இன்று தமிழர்களின் பூர்விக பகுதியான ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து மீட்டுத்தருமாறு கோரி ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொல் பொருள் திணைக்களம் தமது வழிபாட்டுத்தலமான ஆதி சிவன் ஆலயத்தினை கையகப்படுத்துவதாகவும் அதனை தடுத்து தமது வழிபாட்டு தலத்தை பெற்றுத்தரவேண்டும் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது
இதன்போது மக்கள் பிரதிநிதிகளே ஏன் இந்த மௌனம் பதவி சுகமா இதற்கு காரணம், வழிபாட்டு சுதந்திரம் வடக்கில் இல்லையா, எம்.பிக்கள் மத்தியில் இந்துக்கள் இல்லையா?, இன்று வெடுக்குநாறிக்கு வேட்டு நாளை நெடுங்கேணி ஐயனாருக்குமா ஆப்பு, தமிழ் மக்கள் பிரதிநிதிகளே வாய்களை கொஞ்சம் திறவுங்கள், இதுவரை இன ஆக்கிரமிப்பு தற்போது மத ஆக்கிரமிப்பா, அன்று இராணுவ ஆக்கிரமிப்பு இன்று தொல்லியல் ஆக்கிரமிப்பா போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , தமிழர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற அட்டூழியங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் வாயை திறந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெடுக்குநாறி மலை உள்வாங்கப்படவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆண்டு காலமாக வழிபாடுகளில் ஈடுபடுகின்ற தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை தடுக்கின்ற ஒரு செயலாகவே இது காணப்படுகிறது என வடமாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அராசாங்கம் அநாகரிகமான முறையில் தமிழ் மக்களுடைய மத வழபாட்டு உரிமையை நிர்மூலம் செய்வது ஜனநாயக பண்புக்கேற்ற விடயம் அல்ல என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்
இதனை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், எம். தியாகராஜா, ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன், வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் எஸ். தணிகாசலம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து. நடராஜசிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆலய நிர்வாகத்தினர், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/105060?ref=rightsidebar

No comments:

Post a Comment