Saturday, July 7, 2018

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்த பொலிசார்!

ஜேர்மனியின் கிழக்கு நகரமான Cottbus நகரில் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த 25 புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறி அவர்களை பொலிசார் பிடித்து சென்றனர்.
காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் பொலிசார் மறுத்துள்ளனர். மேலும் , புகலிடக்கோரிக்கையாளர்களின் ஆடைகளை கழற்றி சிறைக்குள் அடைத்துள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்ட ஒருவரை, உள்ளாடையுடன் அமரவைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கழிவறைக்கு செல்லும்போது காலணிகளை அணிந்துகொண்டு செல்லக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் கடிதம் எழுதி உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

http://news.lankasri.com/germany/03/182829?ref=ls_d_germany

No comments:

Post a Comment