Wednesday, July 18, 2018

வரலாற்றை அழியவிடாது காப்பது தொடர்கிறது!


எது இருப்பினும், எமது மண்ணுக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அங்கிருக்கும் சில சான்றுகள் எமது வரலாறைப் பலப்படுத்துவதாகவும் அங்கேயுள்ள சான்றுகள் எமக்குப் போதிய ஆதராமாக அமைந்துள்ளன என்றும் சமீபத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். குறிப்பாக நாம் பேசும் தமிழ் மொழியின் எழுத்து வடிவம் ஏறக்குறைய கி.மு 3000 - 2500 கால கட்டத்தைச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரீகத்து காலத்தை ஓட்டியிருப்பதாகவும், எகிப்திய நாகரீகத்து வழக்கத்தில் தமில் எழுத்து உருவ அமைப்புகள் இருந்தததாகவும், அசோகரின் கல்வெட்டு சாதனத்தில் உள்ள எழுத்து வடிவமே பிரம்மி என்றும் கூறியிருக்கிறார்கள். இவற்றைவிட, அப்பப்போ கிரிஸ்தவ மத போதகர்களின் எழுதப்பட்ட குறிப்புகளும், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் வெளிவந்த வருடாந்த அறிக்கைகளும், இருக்கின்ற போதும் அவை யாவும் அவர்களின் எண்ணப்படி, அவர்களுக்குச் சாதகமாக திரிக்கப்பட்டும், மாற்றப்பட்டும், விடப்பட்டும், அரசாட்சியை நியாயப் படுத்தியும் இருக்கின்றன. முரணான செய்திகள் பல காணப்படுகின்றன. எனவே உண்மையான விடையங்கள் சிலவற்றை சற்று விரிவாக அலசி ஆராய்ந்து பிற்காலத்தில் நமது பல அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும், கல்விமான்களும் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.
மேலும் கி.மு. 850 காலத்தில் விஜயபாலன் என்ற சோழ அரசன் தஞ்சை நகரைக் கைப்பற்றினான் என்றும், இவன் வம்சத்தில் வந்த முதலாம் ராஜா ராஜா சோழன் கி.பி 1014 ல் இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தனை வென்று அனுராதபுரத்தையும், வடபகுதியையும் பின்னர் பொலநறுவையை தலைநகராக்கி பல கோயில்களைக் கட்டினான் என்றும் தமிழகத்து வரலாறு நூல்கள் கூறுகின்றன. நில அளவு முறையை அறிமுகப் படுத்தியதோடு, தஞ்சைப் பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டிவித்து, பின் வங்காள அரசன் முதலாம் மகிபாலனை தோற்கடித்து, கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீரைக் கொண்டுவந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழகங்கம் என்ற ஏரியில் சேர்த்தான் என்றும், அதனால் "கங்கை கொண்ட சோழன்" என்ற பெயரும் பெற்றான் என்றும் வரையறுத்துக் கூறுவதற்கு பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. இளம் பிராயத்தில் மதுராந்தகன் என்று அழைக்கப்பட்ட இவரது மகனான இராஜேந்திரன் கி.பி 1002 - கி.பி 1044 வரை ஆட்சி செய்த காலத்தில் இலங்கை முழுவதையும் கைப்பற்றி சோழ இராட்சியத்தை ஸ்தாபித்தான் என்றும் தொடர்ந்து, அந்தமான், நிக்கோபார், தீவுகள், இலங்கை, மாலைதீவு, தாய்லாந்து, மலேசிய, இந்தோனேசியா போன்ற இடங்களையும் கைப்பற்றி சோழ அரசை பலப்படுத்தினான் என்றும் கல்வெட்டுகள், கோயில்கள், சின்னங்கள், குறிப்புகள், இலக்கியங்கள், புராணங்கள், போன்றவற்றுடன் இவை சான்றாக இருந்தபோதும் எழுத்தாளர்கள் பலர் இந்த விடயங்களை திரித்து எழுதி வருகிறார்கள் என்பது வேதனைக்குரிய விடயமே.

காலத்திற்கு காலம் ஏற்படும் மாற்றங்களினால் எமது வரலாற்றுச் சுவடுகளிலும் அப்பப்போ சில பதிவுகள் மாற்றப்படுகின்றன. நாம் எமது வரலாற்றை திரும்பிப் பார்க்கவேண்டிய கடடாயத்தில் இருக்கின்றோம். உண்மையான பதிவுகளை எமது அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்ப்பது எமது கடமை என்று நினைக்கின்றேன்
எமது இலங்கைத் தீவிற்கும் இந்தியாவிற்கும் பாக்கு நீரினை யூடாக இருக்கும் தூரம் பதினாறு மைல்களே. கி. மு. 6000 ற்கும் கி.மு 3000 இடைப்படட காலத்தில் பெரும் சுனாமியினால் இலங்கைத் தீவு இந்தியாக் கண்டத்தில் இருந்து பிரிந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
கி.மு.6-ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு.4-ம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகா வம்சம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மஹாநாம தேரா என்பவரால் தொகுக்கப்பட்டு, இலங்கையின் பூர்வ சரித்திரமாக கருதப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆட்சி கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே இருந்ததாகவும் தமிழர்கள் 14ம் நூற்றாண்டிலேயே இலங்கையில் குடியேறினார்கள்
பல சிங்கள எழுத்தாளர்கள் தமிழர் வரலாற்றையும் வாழ்வியலையும் பல விதமாக எழுதி இருக்கிறார்கள். மகாவம்சத்தை சான்றாக வைத்து சிங்கள எழுத்தாளர்கள் இலங்கையில் விஜயனே முதல் குடிமகன் என்றும், யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆட்சி கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே இருந்ததாகவும் தமிழர்கள் 14ம் நூற்றாண்டிலேயே இலங்கையில் குடியேறினார்கள் என்றும் வாதம் செய்து வருகின்றனர். டி.எ. பெரேரா என்பவர் ஐ லாண்ட் சண்டே பத்திரிகையில் பல காரணங்களை வலியுறுத்தியும் முதலியார் சி. இராசநாயகம் எழுதிய "Ancient Jaffna" நூலில் உள்ள விபரங்களையும், யாழ்ப்பாண வைபவ மாலையில் இருக்கின்ற சான்றுகளையும் மறுத்து எழுதியிருக்கிறார். (அடாது வெப்பம் அடித்தாலும், விடாது தொடருவேன்)


Chelvadurai Shanmugabaskaran

No comments:

Post a Comment