Tuesday, July 17, 2018

இலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல் !

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்து மாத குழந்தை மற்றும் மனைவியிடம் இருந்து பிரித்து நாடு கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற திலீபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே திலீபன் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது. இதனையடுத்து அவர் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார்.


கடந்த புதன்கிழமை திலீபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள், திலீபனை நாடு கடத்தியுள்ளது சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது.
திலீபன் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பணி நிரந்தர விசாவை தாய்க்கும் குழந்தைக்கும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள போதிலும் இந்த விசா குடும்பங்கள் மீண்டும் இணைவதற்கு அனுமதிக்கவில்லை என மனித உரிமை ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திலீபனின் மனைவி தனது கணவரை அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் அழைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆதரவாளர்கள், திலீபனின் மனைவிக்கு உயிராபத்து உள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதால் அவர் இலங்கை திரும்பிசெல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கையில் தாம் கடத்தப்பட்டு சித்திரவதை செய்ய்பபட்டதாக திலீபன் தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி நாட்களில் திலீபனின் தந்தையும் சகோதரரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/australia/03/183637?ref=ls_d_special

No comments:

Post a Comment