Monday, July 16, 2018

சுவிற்சலாந்தில் சைவ ஆதீன குருமுதல்வர்கள்???


தென் இந்தியாவில் சனாதனதர்மம் வளர்க்கும் மூன்று சைவ ஆதீன குருமுதல்வர்கள் சைவ சுற்றுலா மேற்கொண்டு அண்மையில் சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
பழனி ஆதீனம் தவத்திரு சாதுசண்முக அடிகள் (தவத்திரு சாதுசுவாமிகள் திருமடம் பழனி), திருப்பேரூர் ஆதீன இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ஆகிய ஆதீன குருமுதல்வர்களே சுவிசிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
செங்காலன் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், வின்ரர்தூர் ஓம் காரனந்தா ஆச்சிரமம், சூரிச் அருள்மிகு சிவன் ஆலயம், கூர் அருள்மிகு நவசத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றிக்கு அவர்கள் தல யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து சூரிச் அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய கும்பாபிசேக மண்டலாபிசேக பூர்த்தி நிகழ்விலும், டூர்ன்ரன் கின்வில் அருள்மிகு ஶ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்ற வைபவத்திலும் ஆதீன முதல்வர்கள் கலந்து ஆசிகள் வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.
பாரிஸில் நடைபெறவுள்ள தமிழ்முறை திருமணத்தில் ஆசி வழங்குவதற்காக ஐரோப்பாவிற்கு வருகை தந்திருந்த ஆதீன குருமுதல்வர்களை சுவிஸ் நாட்டிற்கு வருமாறு செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி ஆலய தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று ஆதீன குருமுதல்வர்கள் சுவிசிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.












http://news.lankasri.com/swiss/01/188242?ref=ls_d_swiss

No comments:

Post a Comment