Tuesday, July 17, 2018

நீதிமன்ற தடைக்குப் பின்னும் பின் லேடனின் பாதுகாவலரை நாடு கடத்திய ஜேர்மனி !

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனுக்கு பாதுகாவலராக இருந்ததாக கருதப்படும் துனிஷியாவைச் சேர்ந்த ஒரு நபரை ஜேர்மனி நாடு கடத்தியுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக சமி என்று அழைக்கப்படும் 42 வயதுள்ள துனிஷியாவைச் சேர்ந்த அந்த நபர், விமானத்தில் ஏற்றி துனிஷியாவுக்கு அனுப்பப்பட்டார்.
கடந்த மாத இறுதியில் அவரை நாடு கடத்த அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், Gelsenkirchen நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.
ஆனால் ஃபாக்ஸ் செய்யப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு தாமதமாக அதிகாரிகளைச் சென்றடைந்ததால், அதற்குள் அவர்கள் அவரை நாடு கடத்தி விட்டனர்.
சமி Bochum நகரில் வசித்து வந்ததோடு 1,168 யூரோக்கள் உதவித்தொகையும் பெற்று வந்தார்.
அவரது புகலிடக் கோரிக்கை 2007 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றின்போது, சமி 9/11 தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு பல மாதங்கள் பாதுகாவலராக செயல்பட்டதாக சாட்சியங்கள் தெரிவித்தன.
சமி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தாலும் நீதிபதிகள் சாட்சியங்களை ஏற்றுக்கொண்டனர்.

http://news.lankasri.com/germany/03/183630?ref=recommended3

No comments:

Post a Comment