Tuesday, July 31, 2018

15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்கும் செவ்வாய் கிரகம்!

செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
பூமியின் நீள் வட்ட பாதையின் வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. இந்த கிரகமானது 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமியின் நீள்வட்ட பாதையில் கடந்து செல்லும்.
பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கிலோ மீற்றர் தூரத்தில் சுழன்று, பூமிக்கு 5 கோடியே 76 லட்சம் கிலோ மீற்றர் நெருக்கத்தில் வரும். இதன் காரணமாக செவ்வாய் கிரகத்தை தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்க முடியும்.
கடந்த மாதம் 27ஆம் திகதி செவ்வாய் கிரகத்திற்கு நேராக பூமி வர தொடங்கியது. இதனால் பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் குறையும். எனவே தான் 5 கோடியே 76 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் இரண்டு கிரகங்களும் சந்திக்கும்.
சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் தாக்கியது. எனினும், தொலைநோக்கியில் இந்த கிரகம் தெளிவாக தெரியும் என்று நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கிரிப்த் வானிலை ஆய்வு மையமானது, செவ்வாய் கிரகம் பூமியை நெருங்கும் காட்சியை ஒன்லைனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 2003ஆம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/science/03/184693?ref=ls_d_tech

No comments:

Post a Comment