Wednesday, June 6, 2018

சுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தடை!


சுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு குறித்த கல்லறை வளாகத்தில் அவர்களின் உறவினர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்க முடியாது என Burgdorf நகர குடியிருப்பாளர்கள் நகர நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
போதிய இடவசதி இன்மை மற்றும் இறுதிச்சடங்கு மேற்கொள்வதில் ஏற்படும் சிரமம், என்றும் இந்துக்களின் இறுதிச் சடங்கானது பெரும்பாலும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெறும். இது கல்லறை வளாகத்தின் பொதுவான செயற்பாட்டை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் இனி தமிழர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை Burgdorf நகர நிர்வாகம் எடுத்துள்ளது.
இந்த தடை உத்தரவானது இப்பகுதியில் உள்ள தமிழர்களை வெகுவாக பாதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு, குறித்த பிரச்சினைக்கு முடிவு ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.
இதனால் நகர நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்தது, மட்டுமின்றி சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியது.
இருப்பினும் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வையும் நகர நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இந்த சூழலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றால் முற்றாக புறக்கணிக்கப்படுவோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், நகரத்தார் மேற்கொண்ட இந்த மாறுதலை தமிழர்களுக்கு உரிய வகையில் எடுத்துக் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே இந்த தடை உத்தரவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

http://www.tamilwin.com/swiss/01/184710?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment