Thursday, June 21, 2018

நேரலையில் கண்ணீர் வடித்த பெண் செய்தியாளர்: மனதை உருக்கும் சம்பவம்


அமெரிக்காவின் எல்லையில் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது தொடர்பாக செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அமெரிக்காவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக வரும் அகதிகளை கட்டுப்படுத்த டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் ஒருபகுதி தான் சட்டவிரோத அகதிகளின் குழந்தைகளை பிரித்து காப்பகங்களில் தங்கவைப்பதாகும்.
அமெரிக்காவின் சட்டவிரோத குடியேற்றத்தில் குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.


டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு அவரது மனைவி மெலேனியா டிரம்ப் உட்பட பல அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் சம்பவம் குறித்து MSNBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதனை வாசித்துக் கொண்டிருந்த அரசியல் செய்தியாளர் ராச்செல் மேடோ, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் அழுகையை அடக்க முடியாமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு செய்தி வாசிப்பை தொடந்துள்ளார்.

மேலும் டுவிட்டரில் நேயர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட ராச்செல் மேடோ, செய்தி வாசிப்பது என்னுடைய பணி, இருந்தாலும் இச்செய்தியை படிக்கும் போது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த உத்தரவுப்படி, கடந்த மே 5ம் திகதி முதல் யூன் 9ம் திகதி வரை 2,206 பெற்றோர்களிடம் இருந்து 2,342 குழந்தைகள் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/usa/03/181564?ref=ls_d_world

No comments:

Post a Comment