Monday, June 4, 2018

கண்ணீர் விட்டு கதறிய அகதி பெண்ணின் சோகக்கதை!

மியான்மரில் ஏற்பட்ட இனப்பிரச்சனை காரணமாக அங்கிருந்து தப்பித்து, தங்கள் குடும்பத்தினருடன் வங்கதேசத்தில் சரணடைந்த அகதிகள் அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
வங்கதேச முகாம்களில் இவர்களுக்கு போதிய வசதிகள் கிடையாது. இருப்பிடம், உணவு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை ஆனால், அங்குள்ள பெண்களும், சிறுமிகளும் கட்டாயத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இங்கேயிருக்கும் அகதி முகாம்களில் பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அகதிகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், சிறுமிகளும்தான். அதுவும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளோ சித்தரவதைகளின் உச்சகட்டம்.
வெளிநாடுகளில் வேலை, தலைநகர் டாக்கா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹோட்டலில் வேலை வாங்கித்தருவதாக தங்களுக்கு ஆசை காட்டப்படுவதாக ரோஹிஞ்சா அகதிகள் கூறுகின்றனர்.
மேலும், அதிக முகாம்களை பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரிகளாலே இப்பெண்கள் பாலியல் துன்பறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்.
சமீபத்தில், Uma Suleiman என்ற அகதி பெண் தனக்கு பிறந்த குழந்தையை தனக்கு வேண்டாம் என கண்ணீர் விட்டு கதறுகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
எனது வயது 30. எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால் விதவையான நான் இந்த குழந்தைகளோடு தப்பித்து வங்கதேசம் வந்தேன்.
இங்கு முகாம்களில் நான் சந்தித்த சித்ரவகைள் ஏராளம். அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான நான், அதனால் கர்ப்பமானேன். மேலும் இங்குள்ள பெண்களை போதைகளுக்கு அடிமையாக்கி பாலியல் துன்புறுத்தல்கள் செய்கிறார்கள்.
கர்ப்பமான நான் குழந்தை பெற்றெடுத்தேன். இந்த குழந்தையின் தந்தையாக நான் யாரை சொல்வேன். ஏற்கனவே எனக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில், முதல் பிள்ளைக்கு 16 வயதாகிறது. அப்படியிருக்கையில் அப்பா யாரென்று தெரியாத இக்குழந்தையை வளர்த்தால் அவனது எதிர்காலம் என்னவாகும் என கண்ணீர் சிந்தியுள்ளார்.

http://news.lankasri.com/othercountries/03/180370?ref=ls_d_world

No comments:

Post a Comment