Thursday, June 7, 2018

ஐரோப்பாவிற்கு செல்லாதீர்கள்! தடுக்கும் ஜேர்மனி அமைப்பு: என்ன காரணம்?


ஜேர்மன் அமைப்பான AHA, ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டாம் என அகதிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.
எங்கள் நாட்டுக்கு வராதீர்கள் என நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலை மாறி இப்போது ஐரோப்பாவிற்கு செல்லாதீர்கள் என ஒரு அமைப்பு கூறி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அவர்களது நோக்கம் சிறந்த ஒன்றாக காணப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு 'Defend Europe' என்னும் பிரச்சாரம் ஒன்று மத்திய தரைக் கடலில் அகதிகளை மீட்கும் தொண்டு நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயலில் இறங்கியது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள முயற்சியின் நோக்கமோ அகதிகளை தொந்தரவு செய்து துரத்துவதற்காக அல்ல, அவர்களை அவர்களது நாட்டிலேயே நன்றாக வாழ்வதற்கு உதவி செய்வதாகும்.
AHA தேவையிலிருக்கும் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றிற்கு 50 டொலர்கள் உதவித் தொகை வழங்குவதோடு அகதிகளின் குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொருளாதார உதவியும் அளித்து வருகிறது.
AHA அமைப்பின் செய்தி தொடர்பாளரான Sebastian Zeilinger கூறும்போது, எங்கள் இலட்சியம், மக்கள் தாங்களே தங்களுக்கு உதவிக் கொள்வதன்மூலம் தங்கள் நாட்டிலேயே ஒரு எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாலும் என்று தெரிவித்தார்.
லெபனானில் தற்போது செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சிரியாவிலும் பல நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு வருகிறது.

http://news.lankasri.com/germany/03/180587?ref=ls_d_germany

No comments:

Post a Comment