Sunday, June 10, 2018

ஜேம்ஸ்பாண்ட் படவரிசையின் முதல் கதாநாயகி மரணம்: இரங்கல் தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்

ஜேம்ஸ்பாண்ட் படவரிசையின் முதல் படத்தில் நடித்த கதாநாயகி Eunice Gayson, தனது 90வது வயதில் மரணமடைந்தார்.
கடந்த 1928ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த Eunice Gayson, ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் முதல் கதாநாயகி ஆவார்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் டாக்டர் நோ எனும் திரைப்படம் (1962) முதலில் வெளியானது.
இந்தப் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் Sean Connery-யும், கதாநாயகி வேடத்தில் Eunice Gayson-யும் நடித்திருந்தனர். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ‘பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்’ எனும் வசனம் மிகவும் பிரபலம்.
இந்த வசனத்தை தொடங்க காரணமாக இருந்தது Eunice Gayson தான். இப்படத்தின் ஒரு காட்சியில் Eunice Gayson தனது பெயரை, ‘டிரெஞ்ச்... சில்வியா டிரெஞ்ச்’ என நிறுத்தி கூறுவார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக Sean Connery, ‘பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்’ என தனது கதாபாத்திரத்தின் பெயரை கூறி அறிமுகப்படுத்திக்கொள்ள, அது மிகவும் பிரபலமானது.
அதன் பின்னர் வெளியான ‘From Russia with Love' எனும் இரண்டாவது ஜேம்ஸ்பாண்ட் படத்திலும் Eunice Gayson-யே கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், லண்டனில் வசித்து வந்த இவர் நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு ஜேம்ஸ்பாண்ட் பட தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி வில்சன் மற்றும் பார்பரா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
Eunice Gayson ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு முன்னர் தி ரிவெஞ்ச் ஆஃப் பிராங்கன்ஸ்டீன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

EON/MGM
Danjaq/EON/UA/Kobal/REX/Shutterstock

http://news.lankasri.com/entertainment/03/180816?ref=ls_d_others

No comments:

Post a Comment