Saturday, June 2, 2018

ஆராய்ச்சியாளர்களை திகைப்பில் ஆழ்த்திய சிறிய மம்மி

சுமார் 2,100 வருடங்கள் பழமை வாய்ந்த சிறிய ரக எகிப்திய மம்மி ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.
குறித்த மம்மியானது ஒரு பறவையின் உடையதாக இருக்கலாம் என அவர்கள் எண்ணியிருந்தனர்.
இதன் அடிப்படையில் அவர்கள் குறித்த மம்மியை CT ஸ்கான் செய்துள்ளனர்.
இதன்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது தாயின் வயிற்றில் கருவுற்று 28 வாரங்கள் கூட ஆகாத சிசு ஒன்றினுடைய மம்மி என தெரியவந்துள்ளது.
இந்த மம்மியானது இங்கிலாந்தின் கென்ற்றில் உள்ள மெயிட்ஸ்டோன் மியூசியத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.


http://news.lankasri.com/science/03/180198?ref=ls_d_tech

No comments:

Post a Comment